பயிற்சி பெண் காவலர்களிடம் முதல்வர் ரங்கசாமி குறைகேட்பு

Added : செப் 14, 2022 | |
Advertisement
புதுச்சேரி : கோரிமேடு காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறும் பெண் காவலர்களிடம் முதல்வர் ரங்கசாமி குறைகளை கேட்டறிந்தார்.புதுச்சேரியில் சமீபத்தில் புதிதாக 400 போலீசார் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காவலர் பயிற்சிப் பள்ளி வழியே முதல்வர் ரங்கசாமி காரில் சென்றார்.



புதுச்சேரி : கோரிமேடு காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறும் பெண் காவலர்களிடம் முதல்வர் ரங்கசாமி குறைகளை கேட்டறிந்தார்.புதுச்சேரியில் சமீபத்தில் புதிதாக 400 போலீசார் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காவலர் பயிற்சிப் பள்ளி வழியே முதல்வர் ரங்கசாமி காரில் சென்றார். அப்போது, அந்த வழியாக பயிற்சி பெறும் பெண் காவலர்கள் நடந்து சென்றனர். டிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறிய முதல்வர் ரங்கசாமி, காரில் இருந்தபடியே, பயிற்சி பெண் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.காவலர் பயிற்சிப் பள்ளியில் வழங்கப்படும் உணவின் தரம், என்னென்ன உணவு வழங்கப்படுகிறது.

வாரத்தில் எத்தனை நாட்கள் அசைவ உணவு வழங்கப்படுகிறது உள்ளிட்ட விபரங்களைமுதல்வர் கேட்டறிந்தார். பின்னர், உணவில் ஊட்டச்சத்து குறைபாடுஇருந்தால், உடனேதன்னிடம் தெரிவிக்குமாறு, அறிவுறுத்தினார். பயிற்சிக் காலத்தில் கடுமையாக உழைத்தால், நல்ல எதிர்காலம் இருக்கும் என வாழ்த்து கூறி, புறப்பட்டுச் சென்றார். முதல்வரின் இந்த செயலால் பயிற்சி பெண் காவலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X