ராஜா பதவியை பறிக்க வேண்டும்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

Updated : செப் 14, 2022 | Added : செப் 14, 2022 | கருத்துகள் (37) | |
Advertisement
திருப்பூர் : 'நீலகிரி எம்.பி., ராஜாவின் பதவியை பறிக்க ஜனாதிபதியிடம் முறையிடுவோம்' என ஹிந்து முன்னணி அறிவித்துள்ளது.மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: நீலகிரி எம்.பி., ராஜா, தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளையும், ஹிந்துக்களையும் கொச்சைப்படுத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த விழாவில், எம்.பி., ராஜா, ஹிந்துக்கள் குறித்து இழிவாக
A Raja, Hindu, Hindu Munnani, Kadeswara Subramaniam

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர் : 'நீலகிரி எம்.பி., ராஜாவின் பதவியை பறிக்க ஜனாதிபதியிடம் முறையிடுவோம்' என ஹிந்து முன்னணி அறிவித்துள்ளது.

மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: நீலகிரி எம்.பி., ராஜா, தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளையும், ஹிந்துக்களையும் கொச்சைப்படுத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த விழாவில், எம்.பி., ராஜா, ஹிந்துக்கள் குறித்து இழிவாக பேசினார்.

பதவியேற்கும் போது, எந்த மதத்தையும் இழிவுபடுத்த மாட்டேன் என்றும், யாருக்கும் பாரபட்சமாக நடக்க மாட்டேன் என்றும் காப்பு பிரமாணம் செய்து விட்டு, ஹிந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார். அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க மாட்டேன் என்கிறார் ராஜா.

தனது கட்சியின் அரசியல் லாபத்திற்காக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி மக்களிடையே பிரிவினையையும், வெறுப்புணர்வையும், தொடர்ந்து இதுபோன்று பேசி வரும் இவர், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.


latest tamil newsதமிழக முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க.,வில், 90 சதவீதம் ஹிந்துக்கள் இருப்பதாக கூறினார். ஆட்சி அமைத்த பின், தி.மு.க., அரசு எந்த மதத்தையும் சார்ந்து ஆட்சி புரியாது, யாரையும் புண்படுத்தாது என்று கூறியதை ஏற்க மறுக்கிறாரா?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், காப்பு பிரமாணத்தையும் காற்றில் பறக்க விட்டு, தான்தோன்றித்தனமாக செயல்படும் எம்.பி., ராஜாவின் பதவியை பறிக்க வேண்டுமென, ஜனாதிபதியிடம் முறையிட உள்ளோம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
14-செப்-202211:17:01 IST Report Abuse
தமிழன் என்ன தவறு செய்திருக்கிறார் ராஜா??? அவர் பேச்சில் என்ன தவறு கண்டீர்? உபி மாநிலத்துல இருக்கற நெனப்புலையே பேசாதீங்க சங்கிகளா. இது தமிழகம்.இப்போதானே ஆரம்பிச்சிருக்கோம் இனி வரும் காலங்களில் இதைவிட அதிகமாய் பேசுவோம். பிடிக்கலேன்னா மாறி போய்டுங்க . எங்க பிள்ளைங்க கோவில்ல அர்ச்சகரா ஆய்டுவாங்க.
Rate this:
14-செப்-202212:16:54 IST Report Abuse
ஆரூர் ரங்சென்னை மேயரை கட்சிப் பெருசுகள் நடத்தும் முறை திமுக வின் சாதீயத்துக்கு சரியான எடுத்துக்காட்டு😶. இவர்கள் பட்டியலின மக்களை கீழாகத்தானே மதிக்கிறார்கள்? ஏமாற்றி வாக்கு வங்கியாக மட்டுமே வைத்துள்ளார்கள்...
Rate this:
14-செப்-202214:51:40 IST Report Abuse
ராமகிருஷ்ணன் ராஜா திமுகவில் உள்ள இந்துக்களை மட்டும் தான் திட்டியுள்ளார். . இன்னும் கேவலமான பேச்சுகளையும் வாங்கி பழக்கப்பட்டவர்கள்....
Rate this:
14-செப்-202214:51:40 IST Report Abuse
ராமகிருஷ்ணன் ராஜாவுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் நிச்சயம் இந்துக்களாக இருக்கமாட்டார்கள்....
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14-செப்-202211:01:26 IST Report Abuse
sankaranarayanan உங்கள் அமைச்சர்களே உங்களை மதிப்பது இல்லை பிறகு மற்றவர்களைப்பற்றி பேசி என்ன பயணப்பா? ஒரு விழாவில் அமைச்ச கே.என். நேருவே சொன்னவார்த்தைகள் நினைவிற்கு வரவில்லையா? சென்னை பெண் மேயரைப்பார்த்து சொன்னார் - போம்மா போ போயி நீயே சொல்லு போ போ போ என்று தடித்த குரலில் சொன்னது மறந்து விட்டதா? எந்த அமைச்சர்களும் இவர்களைபோன்ற நபர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது. எப்போது பார்த்தாலும் நடைமுறையில் இல்லாதா பழைய கதையே சொல்லி சொல்லி காலத்தை போக்குகிறார்கள்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
14-செப்-202210:37:49 IST Report Abuse
தமிழ்வேள் உ பி மாநிலத்தில் வழக்கு பதிவு செய்து, பிறகு தூக்கி உள்ளே வைத்து கும்மி எடுத்தால் எந்த திராவிடத்தால் ஒன்றும் செய்ய இயலாது. ஆ ராசா, தான் 2 ஜி கேசில் தனிமைப்படுத்தப்பட்டு, திமுகவால் பழிவாங்கப்படுவோம் என்று பயப்படுகிறார். ஆதலால் ஒட்டுமொத்த திராவிடத்தையும் சாக்கடையில் தன்னோடு சேர்ந்து இழுக்கும் வேலை செய்கிறார் [அவர்கள் ஒட்டுமொத்த சாக்கடைகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே] எப்படியோ திருட்டு திராவிடம் ஒழிந்தால் சரி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X