இந்திய கம்யூ., மாநில நிர்வாகக்குழு கூட்டம்| Dinamalar

இந்திய கம்யூ., மாநில நிர்வாகக்குழு கூட்டம்

Added : செப் 14, 2022 | |
புதுச்சேரி : இந்திய கம்யூ., புதுச்சேரி மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சலீம் வரவேற்றார்.நிர்வாகிகள் கலைநாதன், சேதுசெல்வம், சுப்பையா, அந்தோணி, அமுதா, மதியழகன் கலந்து கொண்டனர். இதில், காரைக்காலில் சுகாதார வசதியை மேம்படுத்த வேண்டும். அங்கு, போதுமான டாக்டர்கள்,



புதுச்சேரி : இந்திய கம்யூ., புதுச்சேரி மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சலீம் வரவேற்றார்.நிர்வாகிகள் கலைநாதன், சேதுசெல்வம், சுப்பையா, அந்தோணி, அமுதா, மதியழகன் கலந்து கொண்டனர். இதில், காரைக்காலில் சுகாதார வசதியை மேம்படுத்த வேண்டும். அங்கு, போதுமான டாக்டர்கள், மருத்துவ உபகரணங்கள், தட்டுப்பாடின்றி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். புதுச்சேரி நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்டாக் சேர்க்கைக்கு இருப்பிட சான்று சரிபார்த்தலை கட்டாயமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X