குடிநீர் பிரச்னை தீர்க்க கோரி அதிகாரியிடம் எம்.எல்.ஏ., மனு

Added : செப் 14, 2022 | |
Advertisement
புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் குடிநீர் பிரச்னை சம்பந்தமாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுப்பணி துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தார்.உப்பளம் தொகுதி நேதாஜி நகர் -2, அழகர்சாமி வீதி மற்றும் திப்புராயபேட்டை, ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் வினியோகிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,விடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, மக்கள் புகார் குறித்து மனு வழங்கினார். தாமரை நகரில் போர்வெல் அமைக்கும் பணி மிக மந்தமாக நடப்பது குறித்து எம்.எல்.ஏ., கேட்டார்.அழகர்சாமி வீதி, ஏழை மாரியம்மன் கோவில் வீதிகளில் தண்ணீர் அழுத்தத்தை அதிகரிக்க துரித நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் கூறினர். வாணரபேட்டை, தாமரை நகரில் போர்வெல் அமைக்கும் பணியை தொடர நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X