சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது 'போக்சோ' வழக்கு

Added : செப் 14, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் 'போக்சோ' வழக்குப் பதிந்துள்ளனர்.லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது பெண், அங்குள்ள இறைச்சி கடையில் பணிபுரிந்தார் அப்போது, வாலிபர் ஒருவரோடு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், அந்த வாலிபர் திருமண ஆசை



புதுச்சேரி : புதுச்சேரியில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் 'போக்சோ' வழக்குப் பதிந்துள்ளனர்.லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது பெண், அங்குள்ள இறைச்சி கடையில் பணிபுரிந்தார் அப்போது, வாலிபர் ஒருவரோடு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், அந்த வாலிபர் திருமண ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், அந்த வாலிபரிடம் பேசி அவரையே மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இதையடுத்து, சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது.பின், சிறுமி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு, கடந்த இரு தினங்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டது. குடும்பத்தார் அவரை, புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு குழந்தை பிறந்தது.டாக்டர்கள், சிறுமியை விசாரித்த போது 16 வயது மட்டுமே நிரம்பியது தெரியவந்ததால், குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இது பற்றி லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை செய்து, 'போக்சோ' சட்டத்தில் வாலிபர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X