விவசாயிகள் சங்கம் சாலை மறியல்

Added : செப் 14, 2022 | |
Advertisement
புதுச்சத்திரம் : விழுப்புரம் - நாகை நான்குவழி சாலைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உரிய இழப்பீடு வழங்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் நடந்தது.பெரியப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே நடந்த போராட்டத்திற்கு, விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் கற்பனைச்செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் கொளஞ்சியப்பன், விவசாய
விவசாயிகள் சங்கம் சாலை மறியல்



புதுச்சத்திரம் : விழுப்புரம் - நாகை நான்குவழி சாலைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உரிய இழப்பீடு வழங்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் நடந்தது.பெரியப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே நடந்த போராட்டத்திற்கு, விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் கற்பனைச்செல்வம் தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலர் கொளஞ்சியப்பன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு, விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் சரவணன், மாக்.கம்யூ., ஒன்றிய செயலாளர் விஜய் முன்னிலை வகித்தனர்.நாகை மாவட்டத்தில் இழப்பீடாக 10 மடங்கு தொகையும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இழப்பீடாக 3 முதல் 5 மடங்கு அதிக தொகையும் வழங்கியுள்ளனர். கடலுார் மாவட்டத்தில் கலெக்டர் அமைதியாக இருப்பதை கண்டித்தும்,

சிதம்பரம் சப் கலெக்டர் கடிதத்தின்படி பி. முட்லுார் புறவழிச்சாலையால், 22க்கும் மேற்பட்ட வீடுகளும், சொத்துக்களும் பாதிக்கப்படும் சூழலில், தீத்தாம்பாளையத்தில் வழித்தடம் 2ஐ கைவிட்டு வழித்தடம் 1ல் சாலை அமைத்திட வேண்டும்.புதுச்சத்திரம் உளுப்பை ராமசாமி அறக்கட்டளை இடத்தில், குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.பெரியபட்டு முதல் சி.முட்லுார் வரை NH 45A நான்கு வழிச் சாலைக்காக நிலம், வீடு, வணிக வளாகம் கொடுத்து, வீடுகள் இடிக்கப்பட்டு உரிய இழப்பீடு கிடைக்காமல் உள்ளவர்களுக்கு, இழப்பீடு வழங்க வலியுறுத்தி சாலை மறியல் நடந்தது.காலை 1௦:00 மணிக்கு துவங்கிய மறியல், சிதம்பரம் டி.ஸ்.பி., ரமேஷ்ராஜ், தேசிய நெடுஞ்சாலை தாசில்தார் புகழேந்தி, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் விக்டோரியா பேச்சு வார்த்தைக்கு பிறகு, 11.15 மணிக்கு கைவிடப்பட்டது.தொடர்ந்து மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்து, மாலை 5.00 மணிக்கு விடுவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X