ஆசிரியர்கள் பயிற்சி முகாம்

Added : செப் 14, 2022 | |
Advertisement
வடலுார் : வடலுாரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான வழிகாட்டி ஆசிரி யர்கள் பயிற்சி முகாம் நடந்தது.வடலுார், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பாலகுருநாதன் தலைமை தாங்கினார். வடலுார் கிளை தலைவர் தனகேசவமூர்த்தி
ஆசிரியர்கள் பயிற்சி முகாம்



வடலுார் : வடலுாரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான வழிகாட்டி ஆசிரி யர்கள் பயிற்சி முகாம் நடந்தது.வடலுார், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பாலகுருநாதன் தலைமை தாங்கினார். வடலுார் கிளை தலைவர் தனகேசவமூர்த்தி வரவேற்றார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் ஸ்டீபன்நாதன் பயிற்சி முகாமை துவக்கி வைத்து, பேசினார். மாவட்ட செயலாளர் தாமோதரன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சுபத்திரா வாழ்த்தி பேசினர்.வடலுார் டி.இ.ஓ., கார்த்திகேயன் நிறைவுரையாற்றினார். ஒருநாள் நடைபெற்ற பயிற்சி முகாமில் கடலுார், விருத்தாசலம், சிதம்பரம் மற்றும் வடலுார் கல்வி மாவட்டத்தில் இருந்து மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளிகளில் இருந்து அறிவியல் ஆசிரியர்கள் பங்கு கொண்டனர்.மாவட்ட பொருளாளர் உதயேந்திரன், நாராயணசாமி, செல்வராணி மற்றும் ஆரோக்கியதாஸ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.

பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவ, மாணவிகள் வருகின்ற மூன்று மாதம் நகர, கிராம அளவில் ஆய்வுகள் மேற்கொண்டு, நவம்பர் இறுதியில் நடைபெறும் மாவட்ட மாநாட்டில் ஆய்வுகளை சமர்பிப்பர். செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X