பா.ம.க., கொடி எரிப்பு; மர்ம நபர்களுக்கு வலை

Added : செப் 14, 2022 | |
Advertisement
புவனகிரி : கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த அழிச்சிகுடி ஊராட்சி அலுவலகம் அருகில் பா.ம.க., கொடி கம்பம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அங்கிருந்த பா.ம.க., கம்பத்தை சேதப்படுத்தி, கொடியை அறுத்து, கயிறை சாலையில் வீசி சென்றுள்ளனர்.தகவலறிந்த அக்கட்சியின் ஒன்றிய செயலர் சங்கர், ஒன்றிய தலைவர் சுந்தர், கிளை செயலர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அப்பகுதியில் இரவு 11.00
பா.ம.க., கொடி எரிப்பு;  மர்ம நபர்களுக்கு வலை



புவனகிரி : கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த அழிச்சிகுடி ஊராட்சி அலுவலகம் அருகில் பா.ம.க., கொடி கம்பம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அங்கிருந்த பா.ம.க., கம்பத்தை சேதப்படுத்தி, கொடியை அறுத்து, கயிறை சாலையில் வீசி சென்றுள்ளனர்.தகவலறிந்த அக்கட்சியின் ஒன்றிய செயலர் சங்கர், ஒன்றிய தலைவர் சுந்தர், கிளை செயலர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அப்பகுதியில் இரவு 11.00 மணிக்கு திரண்டனர்.

அப்போது ஊராட்சி அலுவலம் பின்புறம் உள்ள வாய்க்கால் கரையில் எரிந்த நிலையில் பா.ம.க., கொடி கிடந்தது.சிதம்பரம் டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் மற்றும் போலீசார் இரவு 12:00 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்று, கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.இது குறித்து பா.ம.க., கிளை செயலர் அன்பழகன் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, கொடிக்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X