மருந்து வாங்கியதில் ஊழல் சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் குற்றச்சாட்டு| Dinamalar

மருந்து வாங்கியதில் ஊழல் சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் குற்றச்சாட்டு

Added : செப் 14, 2022 | |
சிதம்பரம் : சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பல்வேறு துறைகளில் சட்டசபை பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.கடலுார் மாவட்டத்தில் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை தலைமையில் ஏழு பேர் கொண்ட சட்டசபை பொது கணக்கு குழுவினர் புவனகிரி, அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் ஆய்வு செய்தனர்.குழு



சிதம்பரம் : சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பல்வேறு துறைகளில் சட்டசபை பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.கடலுார் மாவட்டத்தில் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை தலைமையில் ஏழு பேர் கொண்ட சட்டசபை பொது கணக்கு குழுவினர் புவனகிரி, அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் ஆய்வு செய்தனர்.குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கூறியதாவது:



அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்துள்ளது. அது குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்.கொரோனா காலத்தில் மருந்து வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாமல் மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது.இது குறித்து விசாரணை நடத்தி, யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தண்டனை பெற்று தரும். மணல் குவாரிகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அது குறித்தும் விசாரிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இக்குழுவில் எம்.எல். ஏ.,க்கள் வேல்முருகன், சிந்தனைச்செல்வன், கலைச்செல்வன், ஜவாஹிருல்லா, டாக்டர் சரஸ்வதி, மாரிமுத்து, ராஜா ஆகியோர் இடம் பெற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X