வாகன ஓட்டிகளை தாக்கி போன் பறிப்பு; காட்டுமன்னார்கோவில் அருகே மர்ம கும்பல் அட்டூழியம்

Added : செப் 14, 2022 | |
Advertisement
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே இரவு நேரத்தில் வாகனத்தில் செல்பவர்களை வழி மறித்து தாக்கி, மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், வாகனங்களில் செல்ல பொது மக்கள் அச்சமடைகின்றனர்.சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் செல்லும், திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி. இரவு நேரங்களில் கிராமங்கள் உள்ள



காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே இரவு நேரத்தில் வாகனத்தில் செல்பவர்களை வழி மறித்து தாக்கி, மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், வாகனங்களில் செல்ல பொது மக்கள் அச்சமடைகின்றனர்.சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் செல்லும், திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி. இரவு நேரங்களில் கிராமங்கள் உள்ள பகுதிகளில் மட்டும் மின் வெளிச்சம் இருக்கும். இடையில் உள்ள மற்ற இடங்களில் சாலைகள் கும்மிருட்டாக இருக்கும்.

இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர், இரவு நேரத்தில் இவ்வழியாக வாகனத்தில் செல்வோரை தாக்கி, கையில் இருக்கும் மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது போன்று எட்டுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது.சமீபத்தில் காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் மேலபருத்திக்குடி காய்சுவாய் பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவர், பணி முடிந்து இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

திருநாரையூர் - சிறகிழந்தநல்லுாருக்கு இடையில் சென்றபோது பின் தொடர்ந்து பைக்கில் வந்த இருவர் திடீரென இளையராஜாவை மடக்கி, அவரை தாக்கி, மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.இதே போல் குமராட்சி பாலாஜி, சிறகிழந்தநல்லுார் தெய்வீகன் ஆகியோரை தாக்கி, மொபைல் போனை பறித்துச் சென்றனர். இச்செயலில் ஈடுபடுபவர்கள் 20ல் இருந்து 25 வயதுக்குட்பட்ட வாலிபர்கள் என, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, வாகனங்களில் செல்வோரை தாக்கி மொபைல் போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X