25 போலீசாரை ஏமாற்றிய போலீஸ்காரர் மீது வழக்கு

Added : செப் 14, 2022 | |
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ஆயுதப்படை காவலர் சக்திவடிவேலன். இவர் 2012ம் ஆண்டு, விக்கிரவாண்டியைச் சேர்ந்த மாறன் என்பவர் தவணை முறையில் பணம் பெற்று வீட்டு மனை வழங்குவதாக சக போலீசாரிடம் கூறியுள்ளார்.முதல் 20 மாதங்கள் ரூ. 1500, அடுத்த 20 மாதங்கள் ரூ. 2000 செலுத்தினால் வீட்டு மனை பெற்றுக் கொள்ளலாம் என திட்டத்தில் சேர அழைத்துள்ளார்.இதை நம்பி, வளவனுார்



விழுப்புரம் : விழுப்புரம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ஆயுதப்படை காவலர் சக்திவடிவேலன். இவர் 2012ம் ஆண்டு, விக்கிரவாண்டியைச் சேர்ந்த மாறன் என்பவர் தவணை முறையில் பணம் பெற்று வீட்டு மனை வழங்குவதாக சக போலீசாரிடம் கூறியுள்ளார்.முதல் 20 மாதங்கள் ரூ. 1500, அடுத்த 20 மாதங்கள் ரூ. 2000 செலுத்தினால் வீட்டு மனை பெற்றுக் கொள்ளலாம் என திட்டத்தில் சேர அழைத்துள்ளார்.

இதை நம்பி, வளவனுார் காவல் நிலைய முதல் நிலை காவலர் ரத்னா மற்றும் அவரது நண்பர்கள் 25க்கும் மேற்பட்ட காவலர்கள் 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சக்திவடிவேலன் மற்றும் அவரது மனைவி வித்யா ஆகியோரிடம் பணம் கட்டி வந்தனர்.வீட்டு மனை திட்டத்தில் 40 மாதங்கள் முடிந்தவுடன், வீட்டு மனை வழங்கவில்லை. இதனால், உறுப்பினர்கள் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். வீட்டு மனை வழங்கும் திட்டத்தை நடத்திய மாறன் இறந்து விட்டதால், தனக்கு ஏதும் தெரியாது என கூறி அனுப்பியுள்ளார்.

பணத்தை கட்டி ஏமாந்த காவலர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.கடந்த ஒரு மாதமாக புகார் மீது விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம், ஆயுதப்படை காவலர் சக்திவடிவேலன், அவரது மனைவி வித்யா ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X