மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள்... அதிவேகம்; மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம்

Updated : செப் 14, 2022 | Added : செப் 14, 2022 | |
Advertisement
திட்டக்குடி : மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். வேகத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி, தொழுதுார், வேப்பூர் மற்றும் பெரம்பலுார் மாவட்டம், அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த நுாற்றுக்கும்
மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள்... அதிவேகம்;  மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம்



திட்டக்குடி : மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். வேகத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி, தொழுதுார், வேப்பூர் மற்றும் பெரம்பலுார் மாவட்டம், அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி வாகனங்கள் விருத்தாசலம், ராமநத்தம் மாநில நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படுகின்றன.விருத்தாசலத்திலிருந்து பெரம்பலுார் வரை பள்ளி, கல்லுாரி வாகனங்கள் இயக்கப்படுன்றன. குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்பதால் தனியார் பள்ளி டிரைவர்கள் சிலர் கட்டுப்பாடற்ற வேகத்தில் வாகனங்களை இயக்கி செல்வதால் மாணவர்களின் பெற்றோர் மற்றும் இச்சாலை வழியே செல்லும் பிறவாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.

மேலும் சில டிரைவர்கள் மொபைல் போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்குவதும் பெற்றொர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. பெண்ணாடத்திலிருந்து ராமநத்தம் வரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அபாய வளைவுகள், சந்திப்புகள் உள்ளன. அரங்கூர் பஸ் நிறுத்தம், பட்டூர், ஆ.பாளையம் வளைவு உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே பலமுறை பள்ளி, கல்லுாரி வாகனங்கள் விபத்தை சந்தித்துள்ளன.மேலும், திருச்சியிலிருந்து கடலுார், புதுச்சேரிக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும், நெய்வேலி என்.எல்.சி., அரியலுார் தனியார் சிமென்ட் ஆலைகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளின் போக்குவரத்தும் அதிகமாக உள்ளதால் காலை, மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

பள்ளி, கல்லுாரி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அந்த வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பள்ளி வாகனங்கள் அதிவேகத்தில் தான் செல்கின்றன. எனவே, பெரிய அளவிலான விபத்துகள் நிகழும் முன்பு, மாணவ, மாணவிகளின் நலனை கருதி, அதிக வேகத்தில் செல்லும் வாகன டிரைவர்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அதே போல் பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், விதிமீறும் டிரைவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X