ஆரோவில்லில் நில பிரச்னை: வெளிநாட்டினர் திடீர் முற்றுகை

Added : செப் 14, 2022 | |
Advertisement
வானுார் : சர்வதேச நகரமான ஆரோவில்லில் வாங்கிய இடத்தை சுத்தம் செய்ய சென்றவர்களை, வெளிநாட்டினர், தடுத்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் சர்வதேச நகரமான ஆரோவில்லில், இடையன்சாவடி - குயிலாப்பாளையம் செல்லும் சாலை இடையில், 2.82 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.இதில், ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டி,
ஆரோவில்லில் நில பிரச்னை: வெளிநாட்டினர் திடீர் முற்றுகை



வானுார் : சர்வதேச நகரமான ஆரோவில்லில் வாங்கிய இடத்தை சுத்தம் செய்ய சென்றவர்களை, வெளிநாட்டினர், தடுத்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் சர்வதேச நகரமான ஆரோவில்லில், இடையன்சாவடி - குயிலாப்பாளையம் செல்லும் சாலை இடையில், 2.82 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.இதில், ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டி, விவசாயம் செய்கிறார். மற்றொரு இடத்தில் நேற்று காலை ஜே.சி.பி., மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், அப்பணியை தடுத்து நிறுத்தினர்.

'இந்த இடம் ஆரோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது' எனக்கூறி, பணியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆரோவில் எஸ்.ஐ., வசந்த் தலைமையிலான போலீசார் பேச்சு நடத்தினர். இந்நிலையில், அங்கு வெளிநாட்டினர், பணி செய்யவிடாமல் முற்றுகையிட்டு அமர்ந்துள்ளனர்.இது குறித்து, ஆரோவில் போலீசில், சுப்ரமணியன் புகார் அளித்துள்ளார். நிலம் இருக்கும் இடத்தில் ஆரோவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X