'மாஜி' டி.ஜி.பி.,வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Added : செப் 14, 2022 | |
Advertisement
விழுப்புரம் : மாஜி சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பு சாட்சிகள் நான்குபேர் ஆஜராகி சாட்சி அளித்தார்.பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, மாஜி சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில், தற்போது சாட்சி விசாரணை நடந்து வருகிறது.நேற்று நடந்த வழக்கு



விழுப்புரம் : மாஜி சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பு சாட்சிகள் நான்குபேர் ஆஜராகி சாட்சி அளித்தார்.பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, மாஜி சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில், தற்போது சாட்சி விசாரணை நடந்து வருகிறது.

நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது, மாஜி சிறப்பு டி.ஜி.பி., மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அரசு தரப்பு சாட்சிகளான தடய அறிவியல் துறையை சேர்ந்த மணிவண்ணன், காஞ்சிபுரம் போலீஸ்காரர் பூபதி, மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் ஜெயக்குமார், சதீஷ் ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.இதையடுத்து, வழக்கு விசாரணையை நாளை 15ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X