மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

Added : செப் 14, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை சக்குடியில் கோயிலுக்கு சேவையாற்ற தரப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டு கோயில் வசம் ஒப்படைத்தனர்.மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் தட்சிணாமூர்த்தி என்பவருக்கு கோயில் அர்த்தஜாம பூஜையின் போது ருத்ரஜெப பணிக்காக மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் 1.25 ஏக்கர் நிலத்திற்கு



மதுரை : மதுரை சக்குடியில் கோயிலுக்கு சேவையாற்ற தரப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டு கோயில் வசம் ஒப்படைத்தனர்.மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் தட்சிணாமூர்த்தி என்பவருக்கு கோயில் அர்த்தஜாம பூஜையின் போது ருத்ரஜெப பணிக்காக மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் 1.25 ஏக்கர் நிலத்திற்கு நிபந்தனை பட்டா கொடுக்கப்பட்டிருந்தது.

அதேபோல ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று தயிர் வழங்க மூக்கன் என்பவருக்கு 75 சென்ட் நிலம் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் நிபந்தனையின்படி செயல்படாமல் சட்ட விரோதமாக நிலங்களை பயன்படுத்தி வந்ததால் பட்டாவை ரத்து செய்து 2 ஏக்கர் நிலங்களையும் மீட்டு தருமாறு கோயில் நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயில் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்து வழங்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆனது.இந்நிலையில் நேற்று சக்குடி கிராம நிர்வாக அலுவலர், ஹிந்து சமய அறநிலையத்துறை மதுரை வடக்கு பிரிவு ஆய்வர் முன்னிலையில் நிலம் மீட்கப்பட்டு அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X