மாற்று மதத்தைச் சேர்ந்தவரா ஆ.ராஜா: காங்., நிர்வாகி கருத்தால் சர்ச்சை

Added : செப் 14, 2022 | கருத்துகள் (62) | |
Advertisement
சென்னை: ஹிந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் தி.மு.க. துணைப் பொதுச்செயலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராஜா மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தி.க. தலைவர் வீரமணிக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் ஆ.ராஜா பேசியதாவது: நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை
H Raja, Hindu, DMK, Congress, Amerikai, Narayanan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஹிந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் தி.மு.க. துணைப் பொதுச்செயலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராஜா மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தி.க. தலைவர் வீரமணிக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் ஆ.ராஜா பேசியதாவது: நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை என்றால் ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது.இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ஹிந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்.எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த வீடியோவை தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை 'தி.மு.க. - எம்.பி.யான ஆ.ராஜா மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பேசியுள்ளார். 'தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என கூறியுள்ளார்.latest tamil news

இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தன் டுவிட்டர் பக்கத்தில் 'ஹிந்துக்களை இழிவாகப் பேசும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஆ.ராஜா போன்றவர்களின் பிரிவினைவாத பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உரத்த குரலில் கண்டிக்காமல் இருப்பது தான் தேசிய அளவில் காங்கிரஸ் வீழச்சிக்கு முக்கிய காரணம். 'மதத்தின் பெயரால் காழ்ப்புணர்ச்சியை உண்டாக்கும் ஆ.ராஜாவை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார்.தி.மு.க.வின் முக்கிய தலைவரான ஆ.ராஜா நீலகிரி தனித் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். அதற்கு முன்பு தனித் தொகுதியாக இருந்த பெரம்பலுாரில் போட்டியிட்டு மத்திய அமைச்சராக இருந்தவர். இந்நிலையில் அவரை மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என காங்கிரஸ் நிர்வாகி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஹிந்து அல்லாத மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலினத்தவருக்கான தனித் தொகுதிகளில் போட்டியிட முடியாது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (62)

s t rajan - chennai,இந்தியா
15-செப்-202211:17:02 IST Report Abuse
s t rajan கனல் கண்ணனை தேடிச் சென்று கைது செய்த ஸ்டாலின் அரசு, ஏன் ராசவைக் கைது செய்யவில்லை ? நீதி மன்றங்கள் இவர் இந்துக்களை வேசி மைந்தர்கள் என்று கூறியதைப் பார்த்து ஏன் மௌனமாக இருக்கிறது. இந்தத் தரம் தாழ்ந்த மனிதனை ஏன் பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலக்கக் கூடாது ?
Rate this:
Cancel
Ram -  ( Posted via: Dinamalar Android App )
15-செப்-202200:40:39 IST Report Abuse
Ram Father George Ponniah sonnane ninaivu irukiratha?A rajavum antha vandheri kumbal thaan
Rate this:
Cancel
14-செப்-202220:42:57 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 //////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X