மாணவியருக்கு பாலியல் தொல்லை; பள்ளி முதல்வர், ஊழியர் கைது

Added : செப் 14, 2022 | |
Advertisement
கலபுரகி : விடுதியில் தங்கிய மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர், ஊழியரை போலீசார் கைது செய்தனர்.கலபுரகி சின்சோலியின் குஞ்சாவரம் போலீஸ் நிலையம் எல்லைக்குள், சமூக நலத்துறை சார்பில் பள்ளி மாணவியர் விடுதி உள்ளது. இங்கு, 100க்கும் அதிகமான மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் காலை சிற்றுண்டி சாப்பிட மறுத்தனர். அங்குள்ள வார்டன்கள்,



கலபுரகி : விடுதியில் தங்கிய மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர், ஊழியரை போலீசார் கைது செய்தனர்.கலபுரகி சின்சோலியின் குஞ்சாவரம் போலீஸ் நிலையம் எல்லைக்குள், சமூக நலத்துறை சார்பில் பள்ளி மாணவியர் விடுதி உள்ளது. இங்கு, 100க்கும் அதிகமான மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் காலை சிற்றுண்டி சாப்பிட மறுத்தனர்.

அங்குள்ள வார்டன்கள், ஊழியர்கள் எவ்வளவு கூறியும் கேட்கவில்லை.தகவல் அறிந்த பெற்றோர், விடுதிக்கு வந்து மாணவியரிடம் கேட்டனர். பள்ளி முதல்வர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அவர்கள், பள்ளிக்கு சென்று ஊழியர்களை கடுமையாக தாக்கினர்.தகவல் அறிந்த எஸ்.பி., இஷாபந்த் பள்ளிக்கு சென்று, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறி, மாணவியருக்கு அவரே சிற்றுண்டி பரிமாறினார்.சமூக நலத்துறை உதவி இயக்குனர் பிரபுலிங்க வாலியின் புகாரையடுத்து, பள்ளி முதல்வர் சேத்தன் குமார் ரெட்டி, ௩௫, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சங்கமேஷ், ௨௫ ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.இவர்கள் மீது, 'போக்சோ' மற்றும் பட்டியல் ஜாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X