நெடுஞ்சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு விரிவாக்கத்துக்கு ஒதுக்கிய நிதி வீண்

Added : செப் 14, 2022 | |
Advertisement
உடுமலை : பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், விபத்துகளை தவிர்க்க, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டுனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலை, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.நகரில், மாரியம்மன் கோவில், அருகே, தேசிய நெடுஞ்சாலையில் பிரிந்து,



உடுமலை : பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், விபத்துகளை தவிர்க்க, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டுனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலை, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.நகரில், மாரியம்மன் கோவில், அருகே, தேசிய நெடுஞ்சாலையில் பிரிந்து, ஏரிப்பாளையம் வரை, இந்த மாநில நெடுஞ்சாலை, நகரப்பகுதி வழியாக செல்கிறது.இந்நிலையில், ரோடு சந்திப்பில் இருந்து, ஏரிப்பாளையம் வரை, மாநில நெடுஞ்சாலை குறுகலாக இருந்ததால், தொடர் விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 10 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில், புதிதாக இரண்டு பாலங்கள் கட்டப்பட்டு, மழை நீர் வடிகாலுக்கு தடுப்பு கட்டி, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது.
இவ்வாறு, பல கோடி ரூபாய் அரசு நிதியில், மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் சில நாட்கள் மட்டுமே வாகன ஓட்டுனர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.பின்னர் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில், படிப்படியாக தள்ளு வண்டி கடைகள் உட்பட தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கத்துவங்கின.
தற்போது, ஏரிப்பாளையம் சந்திப்பு முதல் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை, ரோட்டின் ஒரு பகுதி முழுவதும், வரிசையாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், மாநில நெடுஞ்சாலையில், வழக்கம் போல், நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.ரோட்டோர கடைகளுக்கு வரும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், இரவு நேரங்களில், நெரிசல் அதிகரித்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறையினரும், இந்த ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல், அலட்சியமாக உள்ளனர்.பல கோடி ரூபாய் அரசு நிதியில், விரிவாக்கப்பட்ட ரோடு, அதிகாரிகள் அலட்சியத்தால், ஒற்றையடிப்பாதையாக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள், அரசுக்கு புகார் மனு அனுப்பி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X