மழை பெய்ததால் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்| Dinamalar

மழை பெய்ததால் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்

Added : செப் 14, 2022 | |
உடுமலை : புரட்டாசி துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் முன்கூட்டியே மழை பெய்ததால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். புரட்டாசி பட்டம் களைகட்டி உள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் கம்பு, சோளம் போன்ற மாட்டு தீவன பயிர்கள், பயறு வகைகள், மக்காச்சோளம், மரவள்ளி போன்ற பணப்பயிர்களை சாகுபடி செய்ய



உடுமலை : புரட்டாசி துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் முன்கூட்டியே மழை பெய்ததால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். புரட்டாசி பட்டம் களைகட்டி உள்ளது.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் கம்பு, சோளம் போன்ற மாட்டு தீவன பயிர்கள், பயறு வகைகள், மக்காச்சோளம், மரவள்ளி போன்ற பணப்பயிர்களை சாகுபடி செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர்.


விவசாயிகள் கூறியதாவது:


ஆடி மாதத்தில், மழை முன்கூட்டியே பெய்தது. ஆடியில் விதைத்தால் புரட்டாசி வரை மழை பெய்யாவிட்டால் பயிர் கருகி விடும் என்று தயக்கம் இருந்தது.புரட்டாசி மாதம் துவங்க இருப்பதால் பயிர் சாகுபடியில் கவனம் செலுத்துகிறோம். பிற பருவங்களில் கிணற்றுப்பாசனத்தை நம்பியே, சாகுபடி செய்ய முடியும்.


சாகுபடி பரப்பும் குறைவாக இருக்கும். ஆனால், இந்த சீசனில், 100 சதவீதம் சாகுபடி செய்ய முடியும்.கிணற்று பாசனம் இன்றி மானாவாரியில் பயிர்கள் வளர்ந்து விடும். விவசாயிகளுக்கு புரட்டாசி பட்டம் மிக முக்கியமான பருவமாகும்.


இதனால், கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட தானியப்பயிர்களும், சின்னவெங்காயம், தக்காளி, பீட்ரூட், வெண்டை, கத்தரி, மிளகாய் என காய்கறி பயிர் சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பந்தல் காய்கறி சாகுபடியாக, பீர்க்கன், புடலங்காய், பாகற்காய் உள்ளிட்டவையும் நடவுப்பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X