'அனுமனை போல இந்திய நிறுவனங்களுக்கு அவற்றின் பலம் தெரியவில்லையா?'

Added : செப் 14, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
புதுடில்லி: ''அன்னிய முதலீட்டாளர்கள், இந்தியாவில் அதிக நம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய தொழில் துறையினர் மட்டும் முதலீடு செய்ய தயங்குவது ஏன்?'' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார். 'மைண்டுமைன்' மாநாட்டில் பேசிய நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது: வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள், இந்தியாவை, தற்போது
நிர்மலா சீதாராமன், முதலீடு , இந்தியா,  Nirmala Sitharaman, Investment, India, Nirmala,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ''அன்னிய முதலீட்டாளர்கள், இந்தியாவில் அதிக நம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய தொழில் துறையினர் மட்டும் முதலீடு செய்ய தயங்குவது ஏன்?'' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

'மைண்டுமைன்' மாநாட்டில் பேசிய நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது: வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள், இந்தியாவை, தற்போது முதலீட்டுக்கு ஏற்ற நாடாக கருதுகின்றன. அன்னிய நேரடி முதலீடு, அன்னிய முதலீடு ஆகியவை அதிகரிப்பதன் வாயிலாக இதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்திய நிறுவனங்கள் ஏன் தயங்குகின்றன என்பது தான் தெரியவில்லை. அவை அனுமனை போல உள்ளனவா? அனுமனின் பலம் அவருக்குத் தெரியாது என்பதைப் போல, இந்திய நிறுவனங்களின் பலம் அவற்றுக்குத் தெரியவில்லையா?


latest tamil news


தங்களுடைய சொந்த பலத்தில், சொந்த திறமையில் அவற்றுக்கு நம்பிக்கை இல்லையா? அருகில் உள்ள யாரோ ஒருவர் அதை எடுத்துச் சொல்ல வேண்டுமா? அப்படிச் சொன்னால்தான் செய்ய முடியுமா?அப்படி எடுத்து சொல்லப்போவது யார்? அது நிச்சயமாக அரசாக இருக்க முடியாது. இந்திய தொழில்துறையினர் முதலீடு செய்வதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம். ஆனால், அவர்களிடம் நான் கேட்க விரும்புவது, உங்களை முதலீடு செய்யவிடாமல் தடுப்பது எது என்பதைத் தான்.

உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதற்கு ஏதுவாக, உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. அத்துடன், வரி விகிதங்களையும் குறைத்துள்ளது. இது இந்தியாவுக்கான நேரம். நாம் இந்த தருணத்தை தவறவிட்டுவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-202217:34:35 IST Report Abuse
எவர்கிங் இந்திய நிறுவனங்களுக்கு அதனதன் பலம் தெரிந்துவிட்டால் எந்தளவுக்கு தெரிந்ததோ அதற்கும் நீங்கள் அதற்கும் ஜி.எஸ்.டி போடுவீங்களோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம்....
Rate this:
Cancel
Arun - Phoenix,யூ.எஸ்.ஏ
14-செப்-202215:46:29 IST Report Abuse
Arun ஒரு பயம்தான் காரணம்.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
14-செப்-202214:50:05 IST Report Abuse
Rengaraj இங்கே வணிகம் செய்யும் பலர் தங்கள் தொழிலின் கணக்கு வழக்குகளை முறையாக பராமரிப்பதில்லை. ஆடிட்டர் சொல்லிவிட்டார் என்பதற்காக ஒரு சில கணக்குகள் புத்தகத்தில் எழுதப்படுகின்றன. சிறு அல்லது குறு வணிகம் செய்பவர்களும் ஏதோ சிறிய நோட்டில் அல்லது சிட்டா என்று ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு வரவு செலவு செய்கிறார்கள். ரொக்க வியாபாரம் அதிகமாக நடக்கிறது. வருமான வரியோ அல்லது ஜி.எஸ்.டீ வரியோ வந்துவிடும் என்று வங்கிகள் மூலமாக பண வரவு செலவு செய்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். ஈமெயில் கூட அனுப்புவதில்லை. நேர்மையான வியாபாரம் செய்வதில் சுணங்குகிறார்கள். எப்டியாவது விற்றுவிட வேண்டும் என்று வியாபாரத்தில் ஒரு ஒழுங்குமுறையை கடைபிடிப்பதில்லை. நவீன ரக கார்களில் வந்தால் மட்டுமே வியாபாரத்தில் தாங்கள் மதிக்கப்படுவதாக அவர்களாகவே தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். சங்கத்தில் ஒரு முக்கியமான பதவியில் இருந்தால் மட்டுமே வியாபாரத்தில் நிலைத்து நிற்க முடியும் என்றும் அவர்களாகவே நினைத்துக்கொள்கிறார்கள். தனியாரிடம் வட்டிக்கு கடன் கிடைப்பதால் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அகலக்கால் வைத்து அதிகமாக முதலீடு செய்து வியாபாரம் செய்ய தயங்குவதில்லை. ஆனால் வங்கிகள் கணக்கு வழக்குகளை மட்டுமே ஆதாரமாக கொள்வதால் அவர்களை நம்பி கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன. தொழில் போட்டி காரணமாகவும் , தொழில்நுட்பத்தின் தாக்கத்தாலும் ஏற்கனேவே ஒரு வணிகருக்கு இருந்த மார்க்கெட் ஷேர் குறைவதும் லாபம் குறைவதும் தவிர்க்கமுடியாதது. தகவல் மற்றும் தொழில்நுட்பம் அவர்களுக்கு கைகொடுக்கிறது என்பதால் இங்கே ஒருவர் வணிகம் செய்யும் ஏரியா அதிகம் ஆகிவிட்டது. போட்டியும் கூடிவிட்டது. திறமையான இளைஞர்கள் வணிகத்தில் வளர்ச்சி பெற்று வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். பேச்சு திறமை மற்றும் வியாபாரத்தில் ஒரு ஒழுங்குமுறையை காணாதவர்கள் வணிகத்தில் வெற்றிக்கான முடிவதில்லை. அரசியல் ரீதியாக தொடர்புகளை வைத்துக்கொண்டு தங்கள் வணிகத்தை வளர்க்க பார்க்கிறார்கள். அது எல்லா நேரத்திலும் கைகொடுப்பதில்லை. ஆனால் அரசாங்கம் கொண்டு வந்த சட்டங்களினால் மட்டுமே தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுவிட்டது என்று பழியை அரசாங்கத்தின் மீது போடுவதற்கும் இப்படிப்பட்ட வணிகர்கள் தயங்குவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X