நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் திட்டம் :வீடு கிடைக்காமல் 'திரிசங்கு' நிலையில் மக்கள்

Added : செப் 14, 2022 | |
Advertisement
உடுமலை : உடுமலையில், நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டவர்களுக்கு, வீடு ஒதுக்கீடு செய்யாததால், பாதித்துள்ளனர்.உடுமலை நகரப்பகுதியில், தங்கம்மாள்ஓடை, தாராபுரம் ரோடு, ஓடை பாரதி நகர், ராமசாமி நகர் பகுதியில், எம்.ஜி.ஆர்., நகர் என, 8 இடங்களில், நீர் நிலைகளை ஆக்கிரமித்திருந்த, 220 பேர் கண்டறியப்பட்டது. இப்பகுதிகளில் உள்ள வீடுகள்ஆக்கிரமிப்பை அகற்ற, புக்குளத்தில் வீட்டு மனை வழங்க



உடுமலை : உடுமலையில், நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டவர்களுக்கு, வீடு ஒதுக்கீடு செய்யாததால், பாதித்துள்ளனர்.

உடுமலை நகரப்பகுதியில், தங்கம்மாள்ஓடை, தாராபுரம் ரோடு, ஓடை பாரதி நகர், ராமசாமி நகர் பகுதியில், எம்.ஜி.ஆர்., நகர் என, 8 இடங்களில், நீர் நிலைகளை ஆக்கிரமித்திருந்த, 220 பேர் கண்டறியப்பட்டது. இப்பகுதிகளில் உள்ள வீடுகள்ஆக்கிரமிப்பை அகற்ற, புக்குளத்தில் வீட்டு மனை வழங்க திட்டமிடப்பட்டது.முதற்கட்டமாக, தங்கம்மாள் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, 48 பேருக்கு, புக்குளத்தில், தலா ஒன்றரை சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உள்ளூர் நபர்கள் போராட்டம் காரணமாக, அடுக்கு மாடி குடியிருப்புகளாக கட்டி, நீர் நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் நபர்கள் என, 320 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும், என ஆறு ஆண்டுக்கு முன் அதிகாரிகள் உறுதியளித்தனர்.புக்குளத்தில், 320 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், தி.மு.க., தலைமையிலான ஆட்சி மாறி, குடிசை மாற்று வாரியம், வாழ்விட மேம்பாட்டு வாரியமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நீர் நிலை புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு, வீடு ஒதுக்கீடு செய்யப்படாமல், ஒரு லட்சத்து, 77 ஆயிரத்து, 700 ரூபாய் கட்டுபவர்களுக்கு மட்டுமே வீடு ஒதுக்கீடு செய்யப்படும், என அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதில், தற்போது, 25 பேர் வரை மட்டுமே, பணம் செலுத்தி வீடுகள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.அரசு குடியிருப்புக்கு, தொகை நிர்ணயிக்கப்பட்டதால், பொதுமக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
இந்நிலையில், தங்கம்மாள் ஓடையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட, 44 பேர் தற்போது வரை, வீட்டு மனை, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கிடைக்காமல், 'திரிசங்கு' நிலையில் தவித்து வருகின்றனர்.எனவே, ஆக்கிரமிப்பு அகற்றியதில், வீடுகளை இழந்த, 44 பேருக்கு, விலையில்லாமல் உடனடியாக வீடு ஒதுக்க வேண்டும்.
நகரில், நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள வீடுகளால், மழை காலங்களில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, எந்த நோக்கத்திற்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டதோ, அதனை நிறைவேற்ற வேண்டும்.
அதிகாரிகள் கூறியதாவது:
வீடற்ற ஏழைகளுக்கு, ஒரு லட்சத்து, 77 ஆயிரத்து, 700 ரூபாய் விலையில் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. முதல் தவணையாக, 50 ஆயிரம் ரூபாய் செலுத்தவும், மீதமுள்ள தொகைக்கு வங்கிக்கடன் வசதியும் செய்து தரப்படுகிறது.ஏற்கெனவே, 500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்த நிலையில், தேர்வு செய்தவர்கள் தொகை கட்டவில்லை. தற்போது, 60 பேர் பணம் கட்டி, வீடுகளில் குடியேறி வருகின்றனர். தொடர்ந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. பெறப்படும் விண்ணப்பங்கள், தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி, தகுதியானவர்கள் என பரிந்துரை கடிதம் பெற்று ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவ்வாறு, தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X