மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : செப் 14, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் அல்லது மாற்று இடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனையை சென்னை ஐ.சி.எச்.,க்கு இணையான வசதிகளுடன் அமைக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை கே.கே.நகர் வெரோனிகா மேரி தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சைப்பிரிவில் 2018 முதல் 2021 அக்., வரை 4,432



மதுரை : மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் அல்லது மாற்று இடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனையை சென்னை ஐ.சி.எச்.,க்கு இணையான வசதிகளுடன் அமைக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை கே.கே.நகர் வெரோனிகா மேரி தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சைப்பிரிவில் 2018 முதல் 2021 அக்., வரை 4,432 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. தகுந்த சிகிச்சை அளிக்கப்படாததால் 261 குழந்தைகள் இறந்துள்ளனர். இதே காலத்தில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் (ஐ.சி.எச்.,) 45 ஆயிரத்து 401 அறுவை சிகிச்சைகள் நடந்தன. 137 குழந்தைகள் இறந்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சைப்பிரிவில் போதிய வசதிகள் இல்லை. குழந்தைகள் இறப்பு விகிதம் சென்னையை ஒப்பிடுகையில் 50 சதவீதம் அதிகம்.சென்னை ஐ.சி.எச்., குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் இந்தியாவில் சிறந்து விளங்குகிறது. குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்னை ஐ.சி.எச்.,க்கு தென் மாவட்ட அரசு மருத்துவமனைகள் பரிந்துரைக்கின்றன. அங்கு தனித்தனி அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர்.

தொலைதுார மாவட்ட ஏழை நோயாளிகள் அங்கு செல்வதில் நடைமுறை சிரமங்கள் உள்ளன.தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் தலைமை அரசு மருத்துவமனைகள் நிறுவப்பட்டாலும், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படவில்லை. மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, நெரிசல் ஏற்படுகிறது.மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் அல்லது மதுரையில் ஏதேனும் மாற்று இடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனையை சென்னை ஐ.சி.எச்.,மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் அமைக்க வேண்டும்.மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவில் நவீன மருத்துவ உபகரணங்கள், குழந்தைகள் நல அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்களைக் கொண்ட அறுவைச் சிகிச்சை அரங்குகளை அமைக்க வேண்டும்.

இங்கு குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவில் குழந்தைகள் இறப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாநில அளவிலான மருத்துவக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு வெரோனிகா மேரி மனு செய்தார்.நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு: தமிழக அரசுத் தரப்பில் விபரம் பெற்று அதன் வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும். தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குனர், அரசு மருத்துவமனை டீனுக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்றது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X