வன்கொடுமையால் பாதிப்பு மறுவாழ்விற்கு  நிதி எவ்வளவு உயர்நீதிமன்றம் கேள்வி| Dinamalar

வன்கொடுமையால் பாதிப்பு மறுவாழ்விற்கு  நிதி எவ்வளவு உயர்நீதிமன்றம் கேள்வி

Added : செப் 14, 2022 | |
மதுரை : வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தினரின் மறுவாழ்விற்கு ஒதுக்கிய, செலவிட்ட தொகை விபரங்களை தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.வாடிப்பட்டி பொட்டுலுபட்டி தனபால் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் 2001 முதல் 2015 வரை பட்டியல் இனத்தைச் சேர்ந்த 471 பேர் கொலை செய்யப்பட்டனர். 363 பேர் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகினர்.



மதுரை : வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தினரின் மறுவாழ்விற்கு ஒதுக்கிய, செலவிட்ட தொகை விபரங்களை தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.வாடிப்பட்டி பொட்டுலுபட்டி தனபால் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் 2001 முதல் 2015 வரை பட்டியல் இனத்தைச் சேர்ந்த 471 பேர் கொலை செய்யப்பட்டனர்.



363 பேர் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகினர். இத்தகைய குற்றங்கள் மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு சட்டப்படி வேலைவாய்ப்பு அல்லது ஓய்வூதியம் அல்லது விவசாய நிலம் அல்லது வீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.



நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மறுவாழ்விற்காக வேலைவாய்ப்பு, இழப்பீடு, இலவச வீட்டுமனை பட்டா உட்பட நல உதவிகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது, பயனாளிகளுக்கு வழங்கியது எவ்வளவு குறித்து தமிழக உள்துறை செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X