தேனி டீன் பாலாஜி நாதனின் மதுரை வீட்டில் லஞ்சஒழிப்பு சோதனை 2 'லாக்கர்' சாவிகள் பறிமுதல்

Added : செப் 14, 2022 | |
Advertisement
மதுரை : திருவள்ளுவர் மாவட்டம் வேல்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக மதுரையில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லுாரி டீன் டாக்டர் பாலாஜிநாதன் வீட்டில் 8 மணி நேரம் போலீசார் சோதனையிட்டு இரு 'லாக்கர்' சாவிகளை கைப்பற்றினர்.வேல்ஸ் மருத்துவக்
தேனி டீன் பாலாஜி  நாதனின்  மதுரை வீட்டில் லஞ்சஒழிப்பு சோதனை 2 'லாக்கர்' சாவிகள் பறிமுதல்



மதுரை : திருவள்ளுவர் மாவட்டம் வேல்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக மதுரையில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லுாரி டீன் டாக்டர் பாலாஜிநாதன் வீட்டில் 8 மணி நேரம் போலீசார் சோதனையிட்டு இரு 'லாக்கர்' சாவிகளை கைப்பற்றினர்.வேல்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கு 2020 ஆண்டில் 300 படுக்கைகளுடன் கூடிய 150 மருத்துவ மாணவர்கள் படிப்பதற்காக அனுமதி வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேல்ஸ் கல்வி நிறுவன ட்ரஸ்டி ஐசரி கணேஷ், வேல்ஸ் மருத்துவக் கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசராஜ் மற்றும் டாக்டர்கள் பாலாஜிநாதன், மனோகர், சுஜாதா, வசந்தகுமார் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.நேற்று காலை 6:00 மணி முதல் மதுரை கோ.புதுார் ஜவஹர்புரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லுாரி டீன் டாக்டர் பாலாஜிநாதன் வீட்டில் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் அம்புரோஸ் ஜெயராஜ், சூரியகலா உள்ளிட்டோர் சோதனையிட்டனர்.

மதியம் 2:00 மணி வரை நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை. வங்கியின் இரு 'லாக்கர்' சாவிகள் கைப்பற்றப்பட்டன.டாக்டர் பாலாஜிநாதன் 2020ல் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி டீனாக இருந்தார். விரைவில் வங்கி லாக்கரை திறந்து ஆவணங்கள் உள்ளதா என சோதனையிட போலீசார் முடிவு செய்துள்ளனர்.தேனி: இவ்வழக்கில் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் குடியிருப்பில் தேனி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுந்தரராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா தலைமையில் 7 பேர் நேற்று காலை 6:30 மணிக்கு சென்று, ஆய்வில் ஈடுபட்டனர். காலை 9:00 மணிக்கு டீன் அலுவலகத்திற்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். பின் மீண்டும் குடியிருப்புக்கு அழைத்து வந்தனர். மதியம் 3:10 வரை சோதனை நடந்தது.



குறைபாடுகளை சுட்டிகாட்டினேன்


முதல்வர் பாலாஜிநாதன் கூறியதாவது: 2021ல் வேல்ஸ் மருத்துவக் கல்லுாரி அனுமதிக்காக என் தலைமையில் குழு ஆய்வு நடந்தது. கல்லுாரி உட்கட்டமைப்பில் குறைபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டித்தான் மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை அளித்தோம். அதுகுறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து, உங்களிடம் விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 8 மணி நேரம் விசாரித்தனர். அதற்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்கினேன். பின் எதுவும் கைப்பற்றப்பட வில்லை என கடிதம் வழங்கிவிட்டு சென்றனர் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X