பட்டுப்புழு வளர்ப்பு மனை சீரமைப்புக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி என்னவானது?

Added : செப் 14, 2022 | |
Advertisement
கோபி: மத்திய அரசு பட்டுப்புழு வளர்ப்பு மனை சீரமைப்புக்கு பணம் ஒதுக்கியும், இன்னும் அத்தொகையை மாநில அரசு வழங்காததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று, பட்டு வளர்ச்சி விவசாயிகள் சங்கம் (தமிழ்நாடு) ஈரோடு மாவட்ட தலைவர் ராஜகோபால் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:தமிழகத்தில், வீரியமிக்க புதிய ரக வெண்பட்டு முட்டை உற்பத்தி செய்ய வேண்டும். தமிழ்நாடு


கோபி: மத்திய அரசு பட்டுப்புழு வளர்ப்பு மனை சீரமைப்புக்கு பணம் ஒதுக்கியும், இன்னும் அத்தொகையை மாநில அரசு வழங்காததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று, பட்டு வளர்ச்சி விவசாயிகள் சங்கம் (தமிழ்நாடு) ஈரோடு மாவட்ட தலைவர் ராஜகோபால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில், வீரியமிக்க புதிய ரக வெண்பட்டு முட்டை உற்பத்தி செய்ய வேண்டும். தமிழ்நாடு பட்டுக்கூடு மார்க்கெட்டை மேம்படுத்த வேண்டும். கர்நாடாகா மாநிலத்தை ஒப்பிடுகையில், 200 ரூபாய் விலை குறைவாக விற்கிறது.

இதனால் தமிழ்நாடு அரசுக்கு வரியிழப்பும் ஏற்படுகிறது. பட்டுக்கூடு வளர்ப்புக்காக அமைக்கப்படும் செட்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும். மானிய விலையில் உபகரணங்கள் வழங்க வேண்டும். மத்திய அரசு பட்டுப்புழு வளர்ப்பு மனை சீரமைப்புக்கு பணம் ஒதுக்கியும், இன்னும் அத்தொகையை மாநில அரசு வழங்காததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.


பட்டுக்கூடு உற்பத்தி செலவு, பூச்சிக்கொல்லி, ஆட்கள் பற்றாக்குறை காரணங்களால், ஆதார விலையாக கிலோவுக்கு, 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மாநில பட்டு வளர்ச்சி துறை சார்பில், விவசாயிகளுக்கு மாதம் ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X