சரக விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

Added : செப் 14, 2022 | |
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான கேரம் மற்றும் இறகுபந்து போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.பாப்பிரெட்டிப்பட்டி சரக விளையாட்டு போட்டிகள், கடத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சச்சின்தாசன் கேரம் ஒற்றையர் பிரிவிலும், மோகித், சச்சின்தாசன் ஆகியோர் இரட்டையர்

பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான கேரம் மற்றும் இறகுபந்து போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி சரக விளையாட்டு போட்டிகள், கடத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சச்சின்தாசன் கேரம் ஒற்றையர் பிரிவிலும், மோகித், சச்சின்தாசன் ஆகியோர் இரட்டையர் பிரிவிலும் முதலிடம் பெற்றனர். இதேபோல், நிதிஷ், ஸ்ரீகாந்த் ஆகியோர் இரண்டாமிடமும், 14 வயது பிரிவில் அனிஷ் இரண்டாமிடமும், மகளிர் இரட்டையர் பிரிவில் செங்கொடி மற்றும் தனுஷ்யா முதலிடமும் பெற்றனர்.

இறகுபந்து போட்டியில் தர்ஷினி, தாமரைச்செல்வி ஆகியோர் முதலிடம் பெற்றனர். இறகுபந்து போட்டி ஆண்கள் பிரிவில் ஒற்றையர் ஆட்டத்தில் அபிஷேக் முதலிடமும், இரட்டையர் பிரிவில் கிஷோர், அபிஷேக் ஆகியோர் இரண்டாமிடமும் பெற்றனர்.
கேரம் மற்றும் இறகுபந்து போட்டிகளில், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார், அஜீத்குமார் ஆகியோரை, ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தாளாளர் முருகேசன், செயலர் பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X