ஈசியாக செய்யலாம்.. ஹெல்த்தியான பயறு ரொட்டி !

Updated : செப் 14, 2022 | Added : செப் 14, 2022 | |
Advertisement
தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடும் போது பலருக்கும் சலிப்பு தட்டுவது வாடிக்கையான ஒன்று. எனவே, விதவிதமான உணவுகளை சாப்பிடுவதில் பலருக்கும் தேடுதல் அதிகமாகவே உள்ளது. அதேவேளையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய, உடல் எடையை குறைக்கக்கூடிய உணவுகளுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆரோக்கியத்தை அள்ளித்தருவதில் பயறு வகை உணவுகளுக்கு எப்போதுமே தனியிடம்
greengramroti, greengram, roti, food, recipes, healthyroti, horse gram, carrot, உணவு, பயறுகள், ரொட்டி, காலை பிரேக்பாஸ்ட், ரெசிபி, கேரட்,

தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடும் போது பலருக்கும் சலிப்பு தட்டுவது வாடிக்கையான ஒன்று. எனவே, விதவிதமான உணவுகளை சாப்பிடுவதில் பலருக்கும் தேடுதல் அதிகமாகவே உள்ளது. அதேவேளையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய, உடல் எடையை குறைக்கக்கூடிய உணவுகளுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

ஆரோக்கியத்தை அள்ளித்தருவதில் பயறு வகை உணவுகளுக்கு எப்போதுமே தனியிடம் உள்ளது. இவை உடல் எடையையும் குறைக்க மிகவும் உதவுகின்றன. எனவே, பாசிப்பயறு, கொள்ளுப்பருப்பு மற்றும் சோளமாவை பயன்படுத்தி ரொட்டி செய்யும் ரெசிபி இதோ...



latest tamil news





தேவையானப் பொருட்கள்


பாசிப்பயறு : 1/2 கப்

கொள்ளுப்பருப்பு : 3 டேபிள் ஸ்பூன்

வெள்ளை சோள மாவு : 1/4 கப்

பச்சை மிளகாய் : 2

இஞ்சி : 1/4 இன்ச்

சீரகம் : 1/2 டீஸ்பூன்

ஓமம் : 2 சிட்டிகை

மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூன்

குருமிளகு : 1/4 டீஸ்பூன்

உப்பு : தேவைக்கேற்ப

கேரட் : 1

பெரிய வெங்காயம் : 1

கொத்தமல்லி இலை : சிறிதளவு


latest tamil news





எப்படிச் செய்வது?



பாசிப்பயறு, கொள்ளுப்பருப்பை நன்றாக தண்ணீரில் கழுவிவிட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். செரிமான பிரச்னை உள்ளவர்கள் நான்கு மணி நேரம் வரை ஊற வைக்கலாம். இதனுடன், ஒரு பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், மஞ்சள் தூள், குருமிளகு மற்றும் உப்பு சேர்த்து மிக்சி ஜாரில் நன்றாக அரைக்கவும். ரொட்டி என்பதால் மிகவும் கெட்டியான பதத்தில் மாவு இருக்க வேண்டும்.

இதில், சோள மாவு, துருவிய கேரட், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை, ஓமம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசையவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து பிசையலாம். இப்போது ஆரோக்கியமான ரொட்டி மாவு ரெடி.


latest tamil news



சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு காட்டன் துணியில் ஒவ்வொன்றாக வைத்து, கைகளால் வட்டமாக தட்ட வேண்டும். கைகளில் ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.

பின், அடுப்பில் தோசைக்கல் காய்ந்தவுடன் எண்ணெய் விட்டு இருபக்கமும் நன்றாக வெந்தவுடன் எடுத்தால் சுவையான, ஆரோக்கியமான பயறு ரொட்டி ரெடி. கேரட்டுக்கு பதிலாக வெள்ளரிக்காய், சுரைக்காய், புடலங்காய், பீட்ரூட் மற்றும் பீர்க்கங்காய் போன்றவற்றையும், கொத்தமல்லி இலைக்கு பதிலாக பாலக்கீரையையும் சேர்க்கலாம்.

இதற்கு சைடு டிஸ்ஸாக ஒரு துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரிக்காயுடன் தயிர், பச்சைமிளகாய் மற்றும் சீரகத்தூள் சேர்த்து ரைத்தா தயாரித்தால் சுவை கூடுதலாக இருக்கும். குறைவான நேரத்தில் எளிதாக தயாரிக்க முடியும் என்பதால், காலை பிரேக் பாஸ்ட் அல்லது இரவு டின்னருக்கு ஏற்ற உணவு இது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X