பெண்ணுக்கு 18 லட்ச ரூபாய் இழப்பீடு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

Added : செப் 14, 2022 | |
Advertisement
கரூரில் பெண்ணுக்கு, லேசர் அறுவை சிகிச்சை சரிவர செய்யாத தனியார் மருத்துவமனை நிர்வாகம், 18 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கரூர், சுங்ககேட் பகுதியைச் சேர்ந்தவர் நல்லத்தாள், 47; இவருக்கு, கரூர், உழவர் சந்தை அருகே உள்ள, தனியார் மருத்தமைனையில் கடந்த, 2015ல் கிட்னியில் இருந்த கல்லை அகற்ற, லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


கரூரில் பெண்ணுக்கு, லேசர் அறுவை சிகிச்சை சரிவர செய்யாத தனியார் மருத்துவமனை நிர்வாகம், 18 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கரூர், சுங்ககேட் பகுதியைச் சேர்ந்தவர் நல்லத்தாள், 47; இவருக்கு, கரூர், உழவர் சந்தை அருகே உள்ள, தனியார் மருத்தமைனையில் கடந்த, 2015ல் கிட்னியில் இருந்த கல்லை அகற்ற, லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கோவையில் உள்ள தனியார் மருத்துவ
மனைக்கு, மேல் சிகிச்சைக்காக நல்லத்தாள் பரிந்துரை செய்யப்பட்டார்.
அங்கு, நான்கு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் செலவில், மூன்று அறுவை சிகிச்சை நல்லாத்தாளுக்கு செய்யப்பட்டது. இதையடுத்து, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேசர் அறுவை சிகிச்சை சரிவர செய்யாததால், தனக்கு, 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, நல்லாத்தாள், கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.
புகார் மனுவை விசாரித்த, ஆணைய தலைவர் பால
கிருஷ்ணன், உறுப்பினர் ரத்தின
சாமி ஆகி யோர், 'சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், நல்லாத்தாளுக்கு, 18 லட்சத்து, 3 ஆயிரத்து 181 ரூபாயை, 7.5 சதவீத வட்டியுடன் கடந்த, 2015 முதல் கணக்கிட்டு இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், செலவு தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என,
உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X