நாமக்கல்லில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் ஸ்டிரைக்| Dinamalar

நாமக்கல்லில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் 'ஸ்டிரைக்'

Added : செப் 14, 2022 | |
போக்குவரத்து ஆணையர் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்கல்லில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று துவங்கியது.'வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் ஓட்டுனர் பள்ளியில் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும், மற்ற மூன்று நாட்கள், பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்' என, போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அவரது


போக்குவரத்து ஆணையர் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்கல்லில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று துவங்கியது.
'வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் ஓட்டுனர் பள்ளியில் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும், மற்ற மூன்று நாட்கள், பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்' என, போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அவரது இந்த உத்தரரவை, திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர், வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி, கூட்டமைப்பு சார்பில் நேற்று முதல் ஓட்டுனர், பழகுநர் தேர்வை புறக்கணித்து, தங்களது போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
இது குறித்து, நாமக்கல் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மற்றும் உரிமையாளர்கள் சங்க செயலாளர் மணி நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்களுக்கு வாரத்தில், 3 நாட்கள், ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு, இரண்டு நாட்கள், ஓட்டுனர் தேர்வு நடத்த வேண்டும் என, போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆன்லைன் மூலம், பொதுமக்கள் பழகுனர் உரிமம் எல்.எல்.ஆர்., எடுத்திருந்தாலும், அரசு அனுமதி பெற்ற பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெற்று, அவர்களின் மூலமே வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று முறையாக தேர்வு நடத்தி ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. எங்களின் பிரதான கோரிக்கை, முன் போல், வாரத்தின், ஐந்து நாட்களும், எங்களது பயிற்சி பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சி எடுத்தவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பதே. இவற்றை வலியுறுத்தி, நாமக்கல், ப.வேலுார் பகுதியை சேர்ந்த, 26 டிரைவிங் பள்ளி உரிமையாளர்கள், ஓட்டுனர் உரிமம் எடுத்து தரும் பணிகளை மட்டும் புறக்கணித்துள்ளோம்
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X