ரூ.5.85 கோடியில் அரசு கட்டடங்களுக்கு பூமி பூஜை

Added : செப் 14, 2022 | |
Advertisement
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் 3 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம், 2 கோடியே 41 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார், எம்.பி., சின்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து


நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் 3 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம், 2 கோடியே 41 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார், எம்.பி., சின்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் நெகிழி பொருட்களை ஒழித்தல், மக்கும், மக்காத குப்பை பிரித்தல் போன்றவை குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மேலும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், அகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சரிதா, சுமதி ஆகியோருக்கு, தலா, 4,480 ரூபாய் மதிப்பிலான மின்கல தெளிப்பான்கள், 2,000 ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்டன.
பள்ளிபாளையம், சமயசங்கிலியை சேர்ந்த சுந்தரராஜ், புதுப்பாளையம் சதீஷ் ஆகியோருக்கு, நெல் ஜெயராமன் மரபுசார்- நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்க திட்டத்தில், 250 ரூபாய் மதிப்பிலான 10 கிலோ நெல், 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X