போதிய அளவு உரம் இருப்பு விவசாயிகள் பயன்பெற அழைப்பு

Added : செப் 14, 2022 | |
Advertisement
குஜராத், 'கிரிப்கோ' உற்பத்தி தளத்தில் இருந்து, 1,300 மெட்ரிக் டன் கிரிப்கோ யூரியா உர மூட்டைகள், ரயில் மூலம் சேலம் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உர கடைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, 620 மெட்ரிக் டன்,



குஜராத், 'கிரிப்கோ' உற்பத்தி தளத்தில் இருந்து, 1,300 மெட்ரிக் டன் கிரிப்கோ யூரியா உர மூட்டைகள், ரயில் மூலம் சேலம் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உர கடைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, 620 மெட்ரிக் டன், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு, 287 மெட்ரிக் டன், ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு, 23 மெட்ரிக் டன் யூரியா அனுப்பப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், தற்போது வரப்பெற்றுள்ள யூரியாவுடன் சேர்த்து, 1,087 மெட்ரிக் டன் யூரியா, டி.ஏ.பி., 808 மெட்ரிக் டன், பொட்டாஷ், 378 மெட்ரிக் டன், காம்ளக்ஸ் உரம், 1,943 மெட்ரிக் டன் என, 4,216 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள், உரத்தை பெற்று பயன்பெற, சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X