இந்திய நிலப்பகுதியை மீட்பது எப்படி?: மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் ராகுல்

Updated : செப் 14, 2022 | Added : செப் 14, 2022 | கருத்துகள் (47) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவிற்கு சொந்தமான ஆயிரம் சதுர கி.மீ., நிலப்பகுதியை, எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் என குற்றம்சாட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அந்த நிலத்தை எப்படி மீட்கப்படும் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.கிழக்கு லடாக் எல்லையில், 2020 மே மாதத்தில் சீனப் படைகள் அத்துமீற முயன்றன.
ராகுல் காந்தி, பிரதமர் மோடி, சீனா, PMModi, CHINA, RAHUL, RAHULGANDHI, CONGRESS, INDIA,  NARENDRA MODI, ராகுல்,  காங்கிரஸ், இந்தியா,  நரேந்திர மோடி, மோடி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியாவிற்கு சொந்தமான ஆயிரம் சதுர கி.மீ., நிலப்பகுதியை, எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் என குற்றம்சாட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அந்த நிலத்தை எப்படி மீட்கப்படும் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கிழக்கு லடாக் எல்லையில், 2020 மே மாதத்தில் சீனப் படைகள் அத்துமீற முயன்றன. இதனால் பாங்காக் ஏரி பகுதியில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, எல்லையில் இந்திய, சீனப் படைகள் குவிக்கப்பட்டன. பல சுற்று பேச்சுகளுக்குப் பின், எல்லையில், 15ம் எண் ரோந்து பகுதிகளான, காக்ரா, ஹாட்ஸ்பிரிங்கில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. கடந்த 8ம் தேதி துவங்கிய இந்தப் பணி, 12ம் தேதிக்குள் முடியும் என்று கூறப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எல்லையில் 2020 ஏப்.,க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்க சீனா மறுத்துவிட்டது. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், இந்தியாவிற்கு சொந்தமான ஆயிரம் சதுர கி.மீ., நிலப்பகுதியை சீனாவிடம் நரேந்திர மோடி வழங்கிவிட்டார். இந்த நிலப்பகுதி எப்படி மீட்கப்படும் என்று மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyanaraman - Chennai,இந்தியா
15-செப்-202200:41:20 IST Report Abuse
Kalyanaraman சம்பாதிக்க இந்தியா, செலவு பண்ண இத்தாலி என்றுள்ள நீங்கள் முதலில் உங்க குடும்ப சொத்தான கட்சியை தொடர் தோல்விகளிலிருந்து எப்படி மீட்பது என்று யோசியுங்கள். உங்கள் நாட்டுப்பற்று.... ஸ் ஸ் ஸ்..ஸ்...ஸ்....புல்லரிக்கிறது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
15-செப்-202200:04:10 IST Report Abuse
M  Ramachandran அது சரி உங்கள் பாத யாத்ரியால் நீங்கள் சந்திக்கும் நபர்கள் தேசிய நோக்கம் அற்றவர்களாகவும் மத சார்பின்மையைக்கு வீட்டு வைபவர்களாகவும் இருப்பதாய் பார்த்தல் ஏதோ ஒரு அண்டெரகிரௌண்ட் அகண்டா யிருப்பதுபோல் தெரிகிறதெ.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
15-செப்-202200:00:51 IST Report Abuse
M  Ramachandran உங்கள் காங்கரஸ் கட்சி நேரு ஆட்சியில் விட்ட 53000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை மீட்பது பற்றி தான் உங்கள் குடும்பம் ரகசிய ஆலோசனையை செய்ய சீனா சென்றீர்களா? முதுகு நிறைய ஆளுக்கு. பிறர் முதுகை சொரிய காரணம் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X