பிரிட்டன் ராணி இறுதிச் சடங்கு: இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்

Updated : செப் 14, 2022 | Added : செப் 14, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: வரும் செப்.,17 முதல் 19 வரை நடைபெற உள்ள பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்வில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர்
Droupadi Murmu, Queen Elizabeth II,  திரவுபதி முர்மு, ராணி எலிசபெத், பிரிட்டன் , Britain,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: வரும் செப்.,17 முதல் 19 வரை நடைபெற உள்ள பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்வில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார். ஸ்காட்லாந்திலிருந்து லண்டன் கொண்டு வரப்பட்ட ராணியின் உடல், பகிங்ஹாம் அரண்மனை வந்தது. அங்கு இரு நாட்கள் வரை ராணியின் உடல் வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.


latest tamil newsஇறுதி சடங்கு நடக்கும் தினம் வரை, ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி ராணியின் இறுதி சடங்கு நடக்கிறது. இதில், அரச குடும்பத்து உறுப்பினர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் என 500க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். செப்.,17 முதல் 19ம் தேதி வரை நடைபெறும் இறுதி சடங்கு நிகழ்வில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நிகழ்வுக்கு ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பு விடப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202206:08:08 IST Report Abuse
அப்புசாமி இந்தியாவை அடக்கி ஆண்ட அந்நிய சக்திகளின் அடையாளங்களில் எலிசபெத் ராணியும்.ஒருவர். அழிச்சிட்டோம். சாரி அவரே போயிட்டாரு.
Rate this:
Cancel
14-செப்-202220:38:00 IST Report Abuse
kulandai kannan வெளியுறவு அமைச்சர் சென்றாலே போதும்.
Rate this:
sivan - seyyur,இந்தியா
14-செப்-202221:11:34 IST Report Abuse
sivan வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்ப முடியாது... இது போன்ற சம்பிரதாய நிகழ்வுக்கு.. அதிகம் வேலை இல்லாத ... இந்திய அதிகாரிகளைத்தான் அனுப்ப முடியும்... ஜனாதிபதி .. சும்மாத்தானே இருக்கிறார் போய் விட்டு வரட்டும் ...
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
14-செப்-202219:46:45 IST Report Abuse
அசோக்ராஜ் அடிமைத்தனத்தின் நீட்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X