127 போலீசாருக்கு பதக்கம்: முதல்வர் உத்தரவு

Added : செப் 14, 2022 | |
Advertisement
சென்னை: அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக போலீஸ், சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், போலீசில் முதல் நிலை காவலர் முதல் எஸ்.பி., வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும்தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தர்ம உயர்த்தப்பட்ட முன்னணி


சென்னை: அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக போலீஸ், சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், போலீசில் முதல் நிலை காவலர் முதல் எஸ்.பி., வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும்

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தர்ம உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் நிலை வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும்

சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காலவர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும்.

ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படை வீரர் முதல் வட்டார தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும்.

விரல் ரேகைப்பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும்

தடய அறிவியல் துறை பிரிவில் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் என மொத்தம் 127 பேரின் மெச்சத்தக்க பணியினை அங்கீகரிக்கும் வகையில், தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் எனக்கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X