புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா மற்றும் அனுராக் சிங் தாகூர் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது அர்ஜூன் முண்டா கூறியதாவது: சத்தீஸ்கரில் வசிக்கும் பிரிஜியா சமுதாயத்தினரையும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் டிரான்ஸ் கிரி பகுதியில் வசிக்கும் ஹட்டி சமுதாயத்தினரையும், தமிழகத்தில் மலை பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தினரையும் எஸ்.டி., பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கியுள்ளது எனக்கூறினார்.