கொச்சி கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்

Updated : செப் 14, 2022 | Added : செப் 14, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: ஓமனின் மஸ்கட் நகரில் இருந்து கொச்சிக்கு 145 பேருடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்ப தயாரான நேரத்தில் இன்ஜீனில் தீ ஏற்பட்டதுடன், புகை கிளம்பியது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.ஓமனின் மஸ்கட் விமான நிலையத்தில்
Air India, Plane,  Fire, Muscat, Airport, Passenger, Safe,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஓமனின் மஸ்கட் நகரில் இருந்து கொச்சிக்கு 145 பேருடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்ப தயாரான நேரத்தில் இன்ஜீனில் தீ ஏற்பட்டதுடன், புகை கிளம்பியது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ஓமனின் மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கேரளாவின் கொச்சினுக்கு கிளம்பியது. விமானத்தில் 4 குழந்தைகள், 6 ஊழியர்கள் உட்பட 145 பேர் இருந்தனர். ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டிருந்த போது, 2வது இன்ஜீனில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டதுடன் புகை கிளம்பியது. இதனையடுத்து விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாற்று விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.


latest tamil news



இது தொடர்பாக, இந்திய விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
14-செப்-202222:03:23 IST Report Abuse
Ramesh Sargam விமான நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதில்தான் கவனம் செலுத்துகிறது. பயணிகளின் நலனில் இல்லை. வொவொரு பயணம் துவங்கும்போது முறையாக பராமரிக்கப்படுவதில்லை. கவனக்குறைவு அதிகம். இந்திய விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் பயணிகளின் நலனில் அவர்களும் அக்கறை கொண்டு, விமான நிறுவனங்களை கடுமையாக எச்சரிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
14-செப்-202221:48:32 IST Report Abuse
Kalyan Singapore நல்லவேளை ஓடுபாதையில் தீ ஏற்பட்டது . ஆகாயத்தில் பறந்த பின்பு ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்குமோ பிறக்கும்போதே தீயை அணைக்க வேண்டிய அமைப்புகள் விமானத்தில் இருந்தாலும் ஒற்றை என்ஜினை வைத்துக்கொண்டு திரும்ப வந்து தரையிறங்கி அவசரமாக பயணிகளையும் வெளியேற்ற வேண்டும் . TATA வின் கீழ் மாறிவிட்டதால் உடன் மாற்று விமானம் ஏற்பாடு செய்து பயணிகளை அனுப்பிவிட்டார்கள். இல்லையேல் மாற்று விமான அனுமதிக்கு 1-2 நாள் விமானநிலையத்திலேயே பயணிகள் உணவு தண்ணி எதுவும் கிடைக்காமல் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
14-செப்-202220:42:05 IST Report Abuse
NicoleThomson ஓமானில் நடந்துள்ளது , ஓஹோ பிளேட் மாத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X