பெண்ணிடம் பணம் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலை

Added : செப் 14, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புவனகிரி: புவனகிரியில் பஸ் விட்டு இறங்கி நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.7ஆயிரத்தை பிடிங்கி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ரோலன்கிறிஸ்டி,45; புவனகிரியில் வீட்டு வேலை செய்து வருகிறார். அவர் மகளை கல்லுாரில் சேர்க்க தன் தாயார் மூலம் வாரத்தண்டலாக ரூ.7 ஆயிரம் பெற்றுக் கொண்டு சிதம்பரம்

புவனகிரி: புவனகிரியில் பஸ் விட்டு இறங்கி நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.7ஆயிரத்தை பிடிங்கி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ரோலன்கிறிஸ்டி,45; புவனகிரியில் வீட்டு வேலை செய்து வருகிறார். அவர் மகளை கல்லுாரில் சேர்க்க தன் தாயார் மூலம் வாரத்தண்டலாக ரூ.7 ஆயிரம் பெற்றுக் கொண்டு சிதம்பரம் அருகே சிலுவைபுரத்தில் இருந்து புவனகிரிக்கு பூவாலை செல்லும் பஸ்சில் வந்தார். புவனகிரி பாலக்கரையில் பஸ்சை விட்டு இறங்கி நடந்த போது பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் பணத்தை பையுடன் பிடிங்கிக் கொண்டு ஓடினார்.
இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இன்று காலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-202220:42:54 IST Report Abuse
அநாமதேயம் இந்த டாஸ்மாக் மற்றும் இலவசங்களால் இப்படி ப்ட்ட திருட்டு நடைபெறுகிறது.பாவம் இப்படியான வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் நடந்த இந்த திருட்டு மனம் பதபதப்பு அடைகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X