பஸ்சை மறித்து கேக் வெட்டியதால் பரபரப்பு| Dinamalar

பஸ்சை மறித்து கேக் வெட்டியதால் பரபரப்பு

Added : செப் 14, 2022 | |
புவனகிரி: கடலுார் மாவட்டம்,சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக குறிஞ்சிப்பாடி மற்றும் சாத்தப்பாடி, புதுச்சத்திரம் பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பஸ் இயக்கப்படுகிறது. இன்று காலை சென்ற அரசு பஸ்சை வழிமறித்து சாத்தப்பாடியில் சிலர் கேக் வெட்டுவதாக கூறி நீண்ட நேரம் நிறுத்தினர். இதனால் அப்பகுதியினர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு தரப்பினர் கேக்கை

புவனகிரி: கடலுார் மாவட்டம்,சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக குறிஞ்சிப்பாடி மற்றும் சாத்தப்பாடி, புதுச்சத்திரம் பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பஸ் இயக்கப்படுகிறது.


இன்று காலை சென்ற அரசு பஸ்சை வழிமறித்து சாத்தப்பாடியில் சிலர் கேக் வெட்டுவதாக கூறி நீண்ட நேரம் நிறுத்தினர். இதனால் அப்பகுதியினர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு தரப்பினர் கேக்கை பிடுங்கிசாலையில் வீசினர். இதனால் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் நிலவியது.


இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி.,ரமேஷ்ராஜ் உத்தரவின் பேரில் புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை பார்த்த உடன் கேக் வெட்ட முயன்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அதன் பஸ் புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டதுடன், பரபரப்பும் காணப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X