ரகசிய லாக்கர்களில் 431 கிலோ தங்கம், வெள்ளி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

Updated : செப் 14, 2022 | Added : செப் 14, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி: பண மோசடி வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில் ரகசிய லாக்கர்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.47 கோடி மதிப்பு கொண்ட 431 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.பரேக் அலுமினெக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் வங்கிகளில் ரூ.2,296.58 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாகவும், அதில் பணமோசடி நடந்துள்ளதாக கடந்த 2018 ல்
Gold, Silver, Seize, Secret Lockers, Bank Fraud Case

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பண மோசடி வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில் ரகசிய லாக்கர்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.47 கோடி மதிப்பு கொண்ட 431 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பரேக் அலுமினெக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் வங்கிகளில் ரூ.2,296.58 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாகவும், அதில் பணமோசடி நடந்துள்ளதாக கடந்த 2018 ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'ரக்ஷா புல்லியன் அண்ட் கிளாசிக் மார்பிள்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது, அந்த நிறுவனத்தில் ரகசிய லாக்கர்கள் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல், கேஓய்சி விண்ணப்பங்கள் சரிபார்க்காமல் லாக்கர்கள் செயல்பட்டு வந்துள்ளன. மேலும், அந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படாததுஅமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.


latest tamil news
அங்கு 761 ரகசிய லாக்கர்கள் செயல்பட்டு வந்தன. அதில், 2 லாக்கர்களல் 91.5 கிலோ தங்கம் மற்றும் 152 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வளாகத்தில் 188 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு ரூ.47.76 கோடி ஆகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raa - Chennai,இந்தியா
19-செப்-202216:05:16 IST Report Abuse
Raa 47 கோடி மதிப்பு கொண்ட 431 கிலோ தங்கம் - அப்ப, ஒரு கிராம் தங்கம்
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
15-செப்-202200:51:32 IST Report Abuse
Dharmavaan கட்டுமர கும்பலை விசாரணை செய்வதை கோர்ட் ஏன் தடுக்கிறது
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
14-செப்-202221:02:14 IST Report Abuse
Ramesh Sargam ஒரு நிறுவனத்திடம் அதிரடி ரெய்டு செய்ததற்கே ரூ.47 கோடி மதிப்பு கொண்ட 431 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பறிமுதல். நாடு முழுவதும் உள்ள சந்தேகப்படும் நிறுவனங்களை ரெய்டு செய்தால் எவ்வளவு கிடைக்கும்? உலக வங்கிக்கே நாம் கடன் கொடுக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X