இந்தியாவில் காற்று வாங்கும் 57 மால்கள்: நைட் பிராங்க் அறிக்கை| Dinamalar

இந்தியாவில் காற்று வாங்கும் 57 மால்கள்: நைட் பிராங்க் அறிக்கை

Updated : செப் 14, 2022 | Added : செப் 14, 2022 | கருத்துகள் (7) | |
இந்தியாவில் செயல்படும் 271 வணிக வளாகங்களில் 21 சதவீதம் அல்லது 57 மால்கள் வாடிக்கையாளர்களின் வருகையின்றி காற்று வாங்கிக் கொண்டிருப்பதாக சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் பிராங்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.1999ல் டில்லியில் அமைக்கப்பட்ட அன்சால் பிளாசா இந்தியாவில் முதல் ஷாப்பிங் மால். அதே ஆண்டில் மும்பையில் கிராஸ்ரோட்ஸ் மால் மற்றும் சென்னையில் ஸ்பென்சர்
Mall, Ghostmall, chennai, NCR, Shoppingmall

இந்தியாவில் செயல்படும் 271 வணிக வளாகங்களில் 21 சதவீதம் அல்லது 57 மால்கள் வாடிக்கையாளர்களின் வருகையின்றி காற்று வாங்கிக் கொண்டிருப்பதாக சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் பிராங்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1999ல் டில்லியில் அமைக்கப்பட்ட அன்சால் பிளாசா இந்தியாவில் முதல் ஷாப்பிங் மால். அதே ஆண்டில் மும்பையில் கிராஸ்ரோட்ஸ் மால் மற்றும் சென்னையில் ஸ்பென்சர் பிளாசா ஆகியவை தொடங்கப்பட்டன. 2003க்குப் பிறகு, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை, ஐதராபாத், புனே போன்ற மெட்ரோ நகரங்களிலும், குருகிராம், நொய்டா, காசியாபாத் போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் மால்கள் பெருக தொடங்கின. தற்போது சென்னையின் புறநகர் வரை அவை வளர்ந்துள்ளன. 2008 வரை புதிய மால்கள் முளைப்பது உச்சத்தில் இருந்தது. பின்னர் உலகளவிலான மந்தநிலையால் மால்களின் வளர்ச்சி குறைந்தன.


latest tamil news


இந்நிலையில் இந்தியாவில் உள்ள மால்கள் பற்றி நைட் பிராங்க் அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மொத்த மால்களின் பரப்பு 9.29 கோடி சதுரடியாக 271 மால்களில் 8 நகரங்களில் அமைந்துள்ளது. ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கோல்கட்டா, மும்பை, டில்லியின் என்.சி.ஆர்., மற்றும் புனே ஆகியவை மால்களின் சந்தையாக உள்ளன. இதில் கிட்டத்தட்ட 57 மால்கள் வாடிக்கையாளர்களின் வருகையின்றி காற்று வாங்குகின்றன. இந்த மால்களின் மொத்த குத்தகை பரப்பு 84 லட்சம் சதுரடியாக உள்ளது.

இதில் பெரும்பகுதி டில்லி, குருகிராம் மற்றும் நொய்டாவில் அமைந்துள்ளன. அங்கு இவ்வாறு காற்று வாங்கும் வணிக வளாகங்களின் பரப்பு 33.5 லட்சம் சதுர அடியாக உள்ளது. மக்கள்தொகை மற்றும் என்ன தேவை என்பது பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் இந்த தொழிலில் குதித்த டெவலப்பர்கள் தற்போது நகத்தை கடித்துக்கொண்டு உள்ளனர். பெங்களூரு இத்தகைய காற்று வாங்கும் மால்களின் அளவு 13.8 லட்சம் சதுரடி, ஐதராபாத்தில் 11.4 லட்சம் சதுரடி, மும்பையில் 11.3 லட்சம் சதுரடியாக உள்ளன. சென்னையில்ம் 3.3 லட்சம் சதுரடி இவ்வாறு உள்ளன. புனே, ஆமதாபாத், கோல்கட்டாவிலும் காற்று வாங்கும் மால்கள் ஆக்கிரமித்துள்ள அளவு சுமார் 3 லட்சம் சதுரடிக்கு மேல் உள்ளது.
என்ன காரணம்latest tamil news


இந்த மால்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்காததற்கு காரணம், மால் நிர்வாகத்தினர் சரியான நடவடிக்கை எடுக்காதது, அளவு மற்றும் கடைகளின் உரிமை முறைகளில் குறைபாடுகள், வடிவமைப்பு சிக்கல்கள், இருண்ட சந்துகள் கொண்ட தளங்கள், வாடிக்கையாளர்கள் நடப்பதற்கான இடப் பற்றாக்குறை, முக்கிய கடைகள் வராதது ஆகியவை இந்த மால்கள் காற்று வாங்க காரணமாக இருக்கின்றன. இந்த மால்கள் முக்கிய இடங்களில் அமைந்திருப்பதால் மீண்டும் நிறுவினால் பணமாக்க முடியும். புனரமைக்கலாம், மாற்றுப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம், தகுந்த முறையில் உத்திகளை வகுத்தால் பணமாக்க முடியும்.

2022ல் மூன்றில் ஒரு பங்கு மால்களின் பரப்பு டில்லி தலைநகர் பகுதியில் அமைந்துள்ளது. இது மால்களுக்கான டாப் 8 சந்தையில் அதிகபட்சமாகும். அதற்கடுத்தப்படியாக 18% பரப்பை மும்பையும், 17 சதவீத பரப்பை சென்னையும் கொண்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X