ஜூலையை விட ஆகஸ்ட்டில் காய்கறி, உணவுப் பொருட்கள் விலை உயர்வு

Updated : செப் 14, 2022 | Added : செப் 14, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
மொத்த விலைக் குறியீடு மூலம் அளவிடப்படும் இந்தியாவின் விலைவாசி வளர்ச்சி ஜூலையில் 13.93 சதவீதமாக இருந்தது, ஆகஸ்டில் ஒன்றரை சதவீதம் குறைந்து 12.41 சதவீதமாக உள்ளது. இருப்பினும் உணவுப் பொருட்கள், காய்கறிகளின் விலைகள் ஜூலையை விட ஆகஸ்டில் உயர்ந்துள்ளன.மொத்த விலைக் குறியீடு என்பது குறிப்பிட்ட காலக்கட்டத்தில் உற்பத்தியாளர்களின் விலையில் ஏற்படும் ஒட்டுமொத்த மாற்றத்தை அளவிட
WPI, Wholesalepriceindex, விலைவாசி, உணவு, காய்கறி

மொத்த விலைக் குறியீடு மூலம் அளவிடப்படும் இந்தியாவின் விலைவாசி வளர்ச்சி ஜூலையில் 13.93 சதவீதமாக இருந்தது, ஆகஸ்டில் ஒன்றரை சதவீதம் குறைந்து 12.41 சதவீதமாக உள்ளது. இருப்பினும் உணவுப் பொருட்கள், காய்கறிகளின் விலைகள் ஜூலையை விட ஆகஸ்டில் உயர்ந்துள்ளன.


மொத்த விலைக் குறியீடு என்பது குறிப்பிட்ட காலக்கட்டத்தில் உற்பத்தியாளர்களின் விலையில் ஏற்படும் ஒட்டுமொத்த மாற்றத்தை அளவிட பயன்படுகிறது. இது ஒரு பொருள் நுகர்வோரை சென்றடையும் முன் இருக்கும் விலையை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கத்தின் அளவீடு ஆகும். இந்த மொத்த விலைக் குறியீடு மாதம் தோறும் வெளியிடப்படுகிறது. ஏப்ரல் 2021 முதல் தொடர்ச்சியாக 17வது மாதமாக மொத்த விலை பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது.


ஆகஸ்ட் மாத பணவீக்கத்திற்கு கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், ரசாயனங்கள், மின்சாரம், உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலைகள் உயர்வில் உள்ளது காரணம். ஜூலை மாதத்தில் 10.77% ஆக இருந்த உணவுப் பொருட்களின் மொத்த விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 12.37% ஆக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் 18.25% ஆக இருந்த காய்கறிகளின் விலை ஆகஸ்ட் மாதத்தில் 22.29% உயர்ந்துள்ளது.


latest tamil news


உற்பத்தி பொருட்களை பொறுத்தவரை மொத்த விலை பணவீக்கம் 7.51% ஆக உள்ளது. உலோகம் அல்லாத பிற கனிம பொருட்கள், மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள், மின்சார உபகரணங்கள், மருந்துகள் ரசாயன மற்றும் தாவரவியல் பொருட்கள், கணினி, மின்னணு மற்றும் ஆப்டிகல் பொருட்கள், ஆடைகள், காகித பொருட்கள், ஆகியவை விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். ரசாயனம், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றின் விலைகள் ஜூலையை விட ஆகஸ்டில் குறைந்துள்ளதாக வர்த்தகம் அமைச்சகம் வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
15-செப்-202211:04:36 IST Report Abuse
Narayanan after all for below 3 cores the government keep on searching velumani and baskaran offices and residents. Why the officers not visiting this 150 crores places?
Rate this:
Cancel
15-செப்-202210:21:07 IST Report Abuse
அப்புசாமி எல்லா காய்கறிகளையும் அமைச்சர் மூர்த்தி விட்டு கல்யாணத்துக்கு அள்ளிக்கிட்டு போயிட்டாங்களாம். அதான் விலயேற்றம். கொஞ்ச நாளக்கி முன் சந்தையிலே ரெண்டு கோடிக்கு ஆடு வாங்குனவங்களும் இதே பார்ட்டியாத்தான் இருக்கும். இவிங்க கரும்பு வாங்கிட்டதாலே பொங்கலுக்கு கரும்பு தட்டுப்பாடு வரும்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
14-செப்-202222:53:09 IST Report Abuse
Mohan ஓ, ஜூன் மாதம் ஃபிரீயா கிடைச்சதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X