மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழாவில் மின் வெட்டு

Added : செப் 14, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
மயிலாடுதுறை: மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழாவில் மின் வெட்டு ஏற்பட்டதால் எம்எல்ஏ என்ன பேசுகிறார் என்று தெரியாமலேயே அரசு பள்ளி மாணவர்கள் கைதட்டி ரியாக்சன் செய்தது வேடிக்கையாக இருந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொறையார், திருக்கடையூர், ஆக்கூர், சங்கரன் பந்தல், எலந்தங்குடி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் விலையில்லா

மயிலாடுதுறை: மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழாவில் மின் வெட்டு ஏற்பட்டதால் எம்எல்ஏ என்ன பேசுகிறார் என்று தெரியாமலேயே அரசு பள்ளி மாணவர்கள் கைதட்டி ரியாக்சன் செய்தது வேடிக்கையாக இருந்தது.



latest tamil news



மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொறையார், திருக்கடையூர், ஆக்கூர், சங்கரன் பந்தல், எலந்தங்குடி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. பூம்புகார் தொகுதி எம்எல்ஏ. நிவேதா எம் முருகன் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் களை வழங்கி பேசினார்.

ஆக்கூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா தொடங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னரே மின்தடை ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சி தொடங்கியதும் மைக் செட்டுகள் வேலை செய்யவில்லை. இருப்பினும் மைக் இல்லாமல் அரசின் திட்டங்கள் குறித்து எம்எல்ஏ. உரையாற்றி கொண்டிருந்தார்.


latest tamil news



அவர் பேசியது அருகில் அமர்ந்திருப்பவர்களுக்கு கூட புரியாத நிலையில், அவர் பேசியதற்கு கைதட்டி ரசிப்பது போல் ஆசிரியர்கள் கைதட்டி சிரித்தனர். அவர்களைப் பார்த்து மேடைக்கு முன்பு அமர்ந்து இருந்த மாணவ மாணவிகளும் கைதட்டி சிரித்து ரியாக்சன் செய்தது வேடிக்கை நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
15-செப்-202206:42:36 IST Report Abuse
சீனி வருடா வருடம் தொடர்ந்து கொடுப்பது தான், தலைமை ஆசிரியரே கொடுக்க முடியாதா? கமிசன் அடிக்கிற பிசியில, இவனுங்களுக்கு நேரம் கிடைச்சு வந்து இந்த சைக்கிளை கொடுப்பதற்க்குள் துருபிடித்து பஞ்சராயிருக்கும். வடிவேல் ரேஞ்சுல 2 மணி நேரம் பேசி கழுத்த்தறுத்து தான் சாவி கொடுப்பார்கள், இதெல்லாம் அனைவரின் நேரமும் வீண். ஆக, மைக் வேலை செய்யாதது நல்ல விசியம் தான்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-செப்-202206:19:00 IST Report Abuse
Mani . V இதற்கு காரணம் அணிலா? கொசுவா?
Rate this:
Cancel
15-செப்-202206:03:19 IST Report Abuse
அப்புசாமி விலையில்லா சைக்கிள்... டுபாக்கூர் சைக்கிள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X