சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கமிஷன்கள் அமைத்து காசை கரியாக்காதீங்க!

Updated : செப் 15, 2022 | Added : செப் 14, 2022 | |
Advertisement
கமிஷன்கள் அமைத்து காசை கரியாக்காதீங்க! அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் எப்போதெல்லாம் ஒரு பிரச்னை மிகப்பெரிய அளவில் முன்னெடுத்து அரசியலாக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உருவான சர்ச்சையை அமுக்க அரசுக்கு உதவுவது, விசாரணை கமிஷன்கள் அமைப்பது


கமிஷன்கள் அமைத்து காசை கரியாக்காதீங்க!அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் எப்போதெல்லாம் ஒரு பிரச்னை மிகப்பெரிய அளவில் முன்னெடுத்து அரசியலாக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உருவான சர்ச்சையை அமுக்க அரசுக்கு உதவுவது, விசாரணை கமிஷன்கள் அமைப்பது என்பதாகும்.
இந்த வகையில், திராவிட கட்சிகளின் ஆட்சியில் இதுவரை, 1,183 விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படித் தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர், தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக கூறிய புகார் அடிப்படையில், ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனும், ஐந்தாண்டு விசாரணைக்கு பின், சமீபத்தில் தான் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு, 'அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை சரியானதே' என்று முடிவு செய்து, எப்போது தன் அறிக்கையை கமிஷன் முன் சமர்ப்பித்ததோ, அப்போதே, ஜெயலலிதா மரணம் குறித்து எழுந்த சந்தேகங்கள் அனைத்துக்கும்
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இருப்பினும், ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையில், சசிகலா உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருப்பது, கட்சிகளும், தலைவர்களும் அரசியல் செய்வதற்கு வேண்டுமானால் உதவலாம்; வேறு எந்த வகையிலும் பயன் தராது.
ஏற்கனவே, ஆறுமுகசாமி கமிஷனுக்கு, 48 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ள நிலையில், இனியும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுவது, மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகவே அமையும். எனவே, உடனடியாக ஆறுமுகசாமி கமிஷனுக்கு மூடு விழா நடத்துவதே சரியானதாக இருக்கும். அதுமட்டுமின்றி, தமிழக அரசு எந்த ஒரு பிரச்னைக்கும், இனி விசாரணை கமிஷன் அமைப்பதை தவிர்க்க வேண்டும். உண்மையில் ஏதாவது, கிரிமினல் குற்றம் நடந்துள்ளதாக கருதினால், முதலில் போலீசார் வாயிலாக விசாரணை நடத்தி, அதை உறுதி செய்ய வேண்டும்; அதன்பின் தான், கமிஷன் பற்றி யோசிக்க வேண்டும். அதுவும், மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் மட்டுமே, இந்த முடிவை எடுக்க வேண்டும். இல்லையெனில், போலீஸ் விசாரணையுடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும்; கமிஷன்கள் அமைத்து காசை கரியாக்கக் கூடாது.


டில்லி கொள்கை முழுமையாக அமலாகுமா?ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக, 26 'தகைசால்' பள்ளிகளும், 15 'மாதிரி' பள்ளிகளும் துவங்கப்பட உள்ளன. இதற்காக முதல்வர் ஸ்டாலின், டில்லி சென்று, அங்குள்ள பள்ளிகளை பார்வையிட்டு, அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனையுடன், அவர் வாயிலாகவே மாதிரி பள்ளிகள் திட்டத்தை துவங்கி இருக்கிறார்; இது வரவேற்கத்தக்கது!தமிழகத்தில் முதல், 'மாதிரி பள்ளி' கோயம்புத்துார் ஆர்.எஸ்.புரத்தில் துவக்கப்பட உள்ளது. இந்த பள்ளியின் முக்கிய அம்சமே, 'நீட்' தேர்வு உட்பட, உயர் கல்விக்கான நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது தான்.'நீட்' தேர்வை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும், திராவிட மாடல் ஆட்சியில், 'நீட்' தேர்வுக்கான சிறப்பு பயிற்சி எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.டில்லியை முன் மாதிரியாக பின்பற்ற நினைக்கும் தமிழக ஆட்சியாளர்கள், அங்கு கடைப்பிடிக்கப்படும் கல்விக் கொள்கையை முழுவதுமாக பின்பற்றுவரா? டில்லியில், 6- முதல், 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டாய கல்வி அமலில் உள்ளது; அங்கு மும்மொழி கொள்கையும் பின்பற்றப்படுகிறது. மூன்றாவது மொழியானது விருப்ப மொழியாகும்; அனைத்து தனியார் பள்ளிகளிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீடும் உண்டு; இது தான், ஏழை மக்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் கெஜ்ரிவாலின் டில்லி மாடல். இதை, முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு, தமிழகத்திலும் செயல்படுத்துமா... மேலும், கட்டண கொள்ளையடிக்கும் இங்குள்ள அரசியல்வாதிகளின் பள்ளிகள், இந்த கொள்கையை ஏற்க முன்வருமா?
மற்றொரு முக்கியமான மாற்றமும், டில்லி கல்வித் துறையில் செய்யப்பட்டுள்ளது... அதாவது, பாடத்திட்டத்தில், 2021- செப்டம்பர் முதல், 'தேசபக்தி பாடம்' என்ற பிரிவு, 12-ம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதுவும் திராவிட மாடல் கல்வி திட்டத்திற்கு ஒத்து வருமா? டில்லி மாநில கல்வி முறையை, தமிழக கல்வித்துறை முழுமையாக அமல்படுத்தினால், அது கிட்டத்தட்ட மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு, தங்களது 'ஸ்டிக்கரை' ஒட்டியது போலவே அமையும்
என்பதில் சந்தேகம் இல்லை.


பன்னீர்செல்வம்திருந்தவே மாட்டார்!நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியில் இருந்து எழுது கிறார்: 'கட்சிப் பதவியை ராஜினாமா செய்து, தொண்டர்களை சந்திக்க தயாரா?' என, பழனிசாமிக்கு, பன்னீர் செல்வம் சவால் விடுத்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. பன்னீர்செல்வம் இன்னமும் கனவுலகில் தான் இருக்கிறார்; உண்மையை உணரவில்லை. ஜெயலலிதா மரணம் அடைந்ததும், முதல்வராக பதவியேற்ற பன்னீர்செல்வத்தை, அந்தப் பதவியில் நீடிக்க விடாமல் கெடுத்தவர் சசிகலா. அப்போது, சசிகலாவிடம் இதுபோன்ற சவால் விடுத்திருக்க வேண்டும்; அதை விடுத்து, தர்மயுத்தம் நடத்தினார். இன்று பழனிசாமி பக்கம், 9௦ சதவீத அ.தி.மு.க.,வினர் உள்ளனர் என்பதே உண்மை; அதை இன்னும் பன்னீர் அறியவில்லை. அதுமட்டுமின்றி, தன் பதவியை பிடுங்கி கேவலப்படுத்திய சசிகலாவை, மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்க விரும்புகிறார்.
ஆனால், பழனிசாமி அப்படியல்ல... சூடு கண்ட பூனை; சசியின் சரித்திரம் நன்கு தெரிந்தவர் என்பதால், அவர் கட்சிக்குள் வரக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார். அவர் வந்தால், கட்சியே அவரின் அடிமையாகி விடும் என்றும் அஞ்சுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்தவரான சசிகலா, வெளியில் உலவுவதற்கே தகுதியற்றவர்; மிகப்பெரிய குற்றவாளி. ஆனால், ஏதோ சுதந்திரத்திற்கு பாடுபட்டு சிறை சென்றது போல பேசி வருகிறார்.
தொண்டர்கள் சந்திப்பு என்ற பெயரில் சுற்றுப் பயணமும் மேற்கொள்கிறார். அவரைப் போய், பன்னீர் விரும்பி அழைக்கலாமா? அடிமை மனப்பான்மை, பன்னீரை விட்டு அகலவில்லை. கடைசி வரை, அவர் திருந்தவே மாட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X