பழைய பயணியர் பெட்டிகள் சரக்கு ரயில் பெட்டிகளாக மாற்றம்

Added : செப் 14, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை:வாகனங்களை ஏற்றி செல்லும் வகையில், 200 பழைய பயணியர் பெட்டிகளை, சரக்கு ரயில் பெட்டிகளாக மாற்றும் பணியை, தெற்கு ரயில்வே துவங்கிஉள்ளது.தெற்கு ரயில்வேயில் கட்டண உயர்வு இன்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்க, பல்வேறு புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.குறிப்பாக, கூடுதல் சரக்குகளை கையாளுவது, 'பார்சல்' ரயில்களை இயக்குவது போன்ற நடவடிக்கைகள்

சென்னை:வாகனங்களை ஏற்றி செல்லும் வகையில், 200 பழைய பயணியர் பெட்டிகளை, சரக்கு ரயில் பெட்டிகளாக மாற்றும் பணியை, தெற்கு ரயில்வே துவங்கிஉள்ளது.

தெற்கு ரயில்வேயில் கட்டண உயர்வு இன்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்க, பல்வேறு புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.குறிப்பாக, கூடுதல் சரக்குகளை கையாளுவது, 'பார்சல்' ரயில்களை இயக்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பயனாக, சரக்கு ரயில் போக்குவரத்து பிரிவில், ஆண்டுதோறும் சராசரியாக 20 சதவீதம் வரை வருவாய் அதிகரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக, சரக்கு ரயில்கள் வாயிலாக, பல்வேறு வகை வாகனங்களை ஏற்றிச் செல்லும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், கூடுதலாக சரக்கு ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணிகளை, தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள்கூறியதாவது: சென்னை, பெரம்பூரில் உள்ள ரயில்வே 'கேரேஜில்' பராமரிப்பு பணிகள் மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன. இது தவிர, பழைய பயணியர் பெட்டிகளை தேர்வு செய்து, அவற்றை சரக்கு மற்றும் 'பார்சல்' ரயில்களுக்கான பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.

சென்னை ரயில்வே கோட்டத்தில் வாகனங்கள் கையாளுவது அதிகரித்து வருகிறது. இதற்காக சரக்கு பெட்டிகள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, மொத்தம் 200 பயணியர் பெட்டிகளை தேர்வு செய்து, அவற்றை இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லும் வகையில், சரக்கு பெட்டிகளாக வடிவமைக்க உள்ளோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள், இந்த பணிகளை முடிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
15-செப்-202210:57:18 IST Report Abuse
jayvee ஒருவேளை இது நடந்தால், பல பயணியர் ரயில்களை நிர்வாகம் கான்செல் செய்யவேண்டியிருக்கும்.. பல ரயில்பெட்டிகள், சரக்கு பெட்டியைவிட மோசமான நிலையில் உள்ளது. முதலில் புது பயணியர் பெட்டிகளை தயார்செய்துவிட்டு பிறகு இந்த முடிவை அமல்படுத்தவேண்டும்.. இல்லையென்றால், பண மதிப்பிட்டு நடவடிக்கையில் பொது மக்கள் கஷ்டப்பட்டது போல மீண்டும் ஆகிவிடும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X