தேர்வு வினாத்தாள் தயாரிப்பு பணி; பள்ளி ஆசிரியர்கள் தீவிரம்

Added : செப் 14, 2022 | |
Advertisement
உடுமலை : உடுமலையில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக, காலாண்டுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்தல் பணிமனை நடத்தப்பட்டு வருகிறது.நடப்பு கல்வியாண்டில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, அனைத்து பாடங்களுக்கும் மாதாந்திர மற்றும் பருவ இறுதி தொகுத்தறித்தேர்வுகளை 'ஆன்லைன்' வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, இந்த தேர்வு, உயர் தொழில்நுட்ப
தேர்வு வினாத்தாள் தயாரிப்பு பணி; பள்ளி ஆசிரியர்கள் தீவிரம்

உடுமலை : உடுமலையில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக, காலாண்டுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்தல் பணிமனை நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பு கல்வியாண்டில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, அனைத்து பாடங்களுக்கும் மாதாந்திர மற்றும் பருவ இறுதி தொகுத்தறித்தேர்வுகளை 'ஆன்லைன்' வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, இந்த தேர்வு, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களைப்பயன்படுத்தி, வெள்ளோட்ட அடிப்படையில் பள்ளிகளில் நடத்தப்படும்.குறிப்பாக, இனிவரும் நாட்களில், இந்த தேர்வுக்கான வினாக்கள், மதிப்பீட்டு புலம் வாயிலாக 'ைஹடெக் லேப்' வழியாகவே நடத்தப்படவும் உள்ளது.

அவ்வகையில், திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், 9ம் வகுப்பு சமூக அறிவியல், நெசவியல் தொழில்நுட்பம், உணவு மற்றும் ஊட்டச்சத்து போன்ற பாடங்களுக்கு மதிப்பீட்டு வினாத்தாள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.இதற்கான, வழிகாட்டல் பணிமனை உடுமலை பார்க் ரோடு, நகராட்சிப்பள்ளியில் நேற்று துவங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் பணிமனையில், முதுநிலை விரிவுரையாளர்கள் பாபிஇந்திரா, விஜிலா, சுப்ரமணியம் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக செயல்படுகின்றனர்.உடுமலை கல்வி மாவட்ட சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, வினோத்குமார், உமாமகேஸ்வரி ஆகியோர் வினாக்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X