கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

Added : செப் 14, 2022 | |
Advertisement
உடுமலை : ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில், உடுமலையில், 185 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது.மத்திய அரசின், 'போஷன் அபியான்' திட்டத்தில், ஆண்டுதோறும், செப்டம்பரில், ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில், அங்கன்வாடி பணியாளர்கள் வாயிலாக, கர்ப்பிணிகளுக்கு
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

உடுமலை : ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில், உடுமலையில், 185 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது.

மத்திய அரசின், 'போஷன் அபியான்' திட்டத்தில், ஆண்டுதோறும், செப்டம்பரில், ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில், அங்கன்வாடி பணியாளர்கள் வாயிலாக, கர்ப்பிணிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், உடுமலை, தேஜஸ் அரங்கில், சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்ட அலுவலர் வீணா தலைமை வகித்தார்.

நகராட்சித்தலைவர் மத்தீன், உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர்.இதையடுத்து, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைத்தட்டு, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், ஜாக்கெட் பிட் மற்றும் ஐந்து வகை உணவு என சீர்வரிசைப்பொருட்கள் வழங்கப்பட்டன. அதேநேரம், சத்துணவு கல்வி, சுகாதாரக்கல்வி, கர்ப்பகால முன்பின் பராமரிப்பு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.நகராட்சி கவுன்சிலர்கள் அஸ்வதி, சிவகாமி, தேஜஸ் ரோட்டரி நிர்வாகிகள், போஷான் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X