ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ள குட்டைகள்!

Added : செப் 14, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம் : காரமடையில் இரண்டு குட்டைகளின் தண்ணீரில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரமடையில் மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில், நகரின் நுழைவு பகுதியில், ரோட்டின் இருபுறமும், குட்டைகள் உள்ளன. இதில் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு நீரூற்று கிடைக்கிறது.தற்போது இரு குட்டைகளில்
ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ள குட்டைகள்!

மேட்டுப்பாளையம் : காரமடையில் இரண்டு குட்டைகளின் தண்ணீரில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரமடையில் மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில், நகரின் நுழைவு பகுதியில், ரோட்டின் இருபுறமும், குட்டைகள் உள்ளன. இதில் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு நீரூற்று கிடைக்கிறது.தற்போது இரு குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரில், ஆகாயத்தாமரை அதிக அளவில் உள்ளன. இதனால் கிணறுகளில் நீர் ஊற்று குறைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: காரமடை சுற்றுப் பகுதிகளில் மழைக்காலத்தில் பெய்யும் மழை நீர், நகரில் உள்ள இரு குட்டைகளில், தேங்கி இருக்கும். இதனால் சுற்றியுள்ள விவசாய கிணறுகளில், ஆறு மாதங்களுக்கு நீரூற்று கிடைக்கும். கிணற்று தண்ணீரை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். சில ஆண்டுகளாக குட்டைகளில் ஆகாயத் தாமரைகள் நிறைந்து காணப்படுவதால், விரைவில் தண்ணீர் வற்றி விட்டது.

இதனால் விவசாய கிணறுகளில் நீரூற்றும் குறைந்து விடுகிறது. தண்ணீரை நம்பியுள்ள விவசாய பயிர்கள் காய்ந்து வருகிறது. எனவே காரமடை நகராட்சி நிர்வாகம், குட்டைகளில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X