கடைசி நாளில் குவிந்த விவசாயிகள்; அவகாசம் தர கோரிக்கைஅவகாசம் தர கோரிக்கை

Added : செப் 14, 2022 | |
Advertisement
அன்னுார் : பிரதமர் கிசான் திட்டத்தில், கடைசி நாளான நேற்று, 175 பேர் பதிவை புதுப்பித்தனர்.பிரதமர் கிசான் திட்டத்தில், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்க நிதியை விவசாயிகள் பெற்று வருகின்றனர். அன்னுார் வட்டாரத்தில், 8,200 விவசாயிகள் இதில் பயன் பெற்று வருகின்றனர். இதில் தொடர்ந்து 12வது தவணையான 2,000 ரூபாய் பெறுவதற்கு பதிவை புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.கடந்த மூன்று

அன்னுார் : பிரதமர் கிசான் திட்டத்தில், கடைசி நாளான நேற்று, 175 பேர் பதிவை புதுப்பித்தனர்.

பிரதமர் கிசான் திட்டத்தில், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்க நிதியை விவசாயிகள் பெற்று வருகின்றனர். அன்னுார் வட்டாரத்தில், 8,200 விவசாயிகள் இதில் பயன் பெற்று வருகின்றனர். இதில் தொடர்ந்து 12வது தவணையான 2,000 ரூபாய் பெறுவதற்கு பதிவை புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.கடந்த மூன்று மாதங்களாக சிறப்பு முகாம் நடத்தி தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் நேற்று முன்தினம் வரை அன்னுார் வட்டாரத்தில், 6,200 பேர் மட்டுமே பதிவை புதுப்பித்திருந்தனர்.

புதுப்பிக்க கடைசி நாளான நேற்று அன்னுார் வட்டார வேளாண் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடந்தது. இங்கும், இ- சேவை மையங்களிலும் என, 175 பேர் நேற்று பதிவை புதுப்பித்தனர். 1,825 பேர் பதிவை புதுப்பிக்காமல் உள்ளனர்.இதுகுறித்து அன்னுார் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'பல்வேறு காரணங்களால் விவசாயிகள் சிலர் பதிவை புதுப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே மேலும் இரு வாரங்களுக்கு அரசு கால அவகாசம் தரவேண்டும்,' என கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X