பள்ளி பாடத்திட்டத்தில் திரைப்பட கல்வி எழுத்தாளர்கள் வரவேற்பு

Added : செப் 14, 2022 | |
Advertisement
உடுமலை : திரைப்படக்கல்வியை அரசு உயர்நிலை பள்ளிகளில் பாடத்திட்டத்தில் இணைத்து நடைமுறைப்படுத்தியது வரவேற்கக்கூடியது என, திரைப்பட ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் தெரிவித்தனர்.மெட்ராஸ் லைப்ரரி அசோசியேசன் ('மாலா'), நடவு பதிப்பகம் மற்றும் முத்தமிழ் சங்கம் இணைந்து நடத்திய பாராட்டு விழா, இணையவழி நுால் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு

உடுமலை : திரைப்படக்கல்வியை அரசு உயர்நிலை பள்ளிகளில் பாடத்திட்டத்தில் இணைத்து நடைமுறைப்படுத்தியது வரவேற்கக்கூடியது என, திரைப்பட ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் தெரிவித்தனர்.

மெட்ராஸ் லைப்ரரி அசோசியேசன் ('மாலா'), நடவு பதிப்பகம் மற்றும் முத்தமிழ் சங்கம் இணைந்து நடத்திய பாராட்டு விழா, இணையவழி நுால் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.இவர்களுக்கு திருப்பூரில் பாராட்டு விழா நடந்தது. மெட்ராஸ் லைப்ரரி அசோசியேசன் (மாலா) தலைவர் அனுராதா தலைமை உரையாற்றினார். நுாலக வாசகர் வட்டம் தலைவர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். மன்ற செயலாளர் ஜெயபாரதி வரவேற்றார்.திருப்பூர் கனவு திரைப்பட இயக்க தலைவர் சுப்ரபாரதிமணியன் பேசியதாவது:திரைப்பட கல்வியை அரசு பள்ளிகளில் ஆரம்பித்து அதுசார்ந்த வகுப்புகள் நடத்துதல், உலக திரைப்படங்களை திரையிடல் ஆகியவற்றை தமிழக அரசு முன்னெடுத்தது பாராட்ட வேண்டிய விஷயம்.

கல்லுாரி மாணவ மாணவியரின் திறமையை வெளிப்படுத்தும், இது போன்ற இணைய வழி நுால் அறிமுகம் நிகழ்ச்சி தொடர வேண்டும். மனிதனின் சிந்தனை வளர்க்கும் நுால் வாசிப்பு இயக்கமாக துவங்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சியில், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆறு சிறுவர் திரைப்பட நுால்கள் அறிமுகம் செய்யப்பட்டன. முத்தமிழ் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் அவர்கள் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.செயின்ட் ஜோசப் கல்லுாரி மாணவி ஷெரின் மேஹா நுால் அறிமுகம்செய்து பேசினார். நிகழ்த்தினார். 'மாலா' அமைப்பின் துணைத்தலைவர் முத்துபாரதி நன்றி கூறினார்.நிர்வாகிகள் சுசிலா தேவி, மணிமேகலை, கவிதா, வித்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X