மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை வாய்ப்பு| Dinamalar

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை வாய்ப்பு

Added : செப் 14, 2022 | |
உடுமலை : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், குண்டடம், திருப்பூர், பொங்கலுார், வெள்ளகோவில் ஒன்றியங்களில் நான்கு வட்டார மேலாளர், காங்கயம், பல்லடம், பொங்கலுார், குண்டடம், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஒன்றியங்களில், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் என, 13 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.பட்டப்படிப்புடன், ஆறுமாத கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற, 28 வயதுக்கு உட்பட்ட, இரண்டு முதல்,

உடுமலை : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், குண்டடம், திருப்பூர், பொங்கலுார், வெள்ளகோவில் ஒன்றியங்களில் நான்கு வட்டார மேலாளர், காங்கயம், பல்லடம், பொங்கலுார், குண்டடம், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஒன்றியங்களில், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் என, 13 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

பட்டப்படிப்புடன், ஆறுமாத கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற, 28 வயதுக்கு உட்பட்ட, இரண்டு முதல், மூன்று ஆண்டு திட்ட பணி அனுபவம், சம்பந்தப்பட்ட ஒன்றியத்தில் வசிக்கும் பேச்சுத்திறன் பெற்ற, 'டூ வீலர்' உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்துக்கு, நேரிலோ, தபால் மூலமாகவோ, வரும் 21ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 0421 2971149 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X